பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413 என்பர். இங்கே காமப்புணர்ச்சி முதலான நான்கினையும் "மறையெனப் பெயர் வழங்குதல் மறையோர் நெறி" என்று கூறியுள்ளதை நோக்கினால் மறை என்பது களவியல் காமப்புணர்ச்சி முதலான நான்கினையும், களவியல் என்று கூறுதல் களவியல் நூலார் நெறி என்றே பொருள் கூற வேண்டும். மறையோர் நெறி' என்பதற்கு வேதத்தையுடைய பார்ப்பனர் நெறி' என்று பொருள் கூறக்கூடாது. அங்ங்ன மாயின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் என்பதற்கு நான்கு வடமொழி வேதங்களை உணர்ந்த அதங் கோட்டாசானுக்கு என்று பொருள் கூறுதல் சிறப்பில்லை. ஏன் எனின்? தமிழிலக்கண நூலைக் கேட்பதற்கு வடமொழிவேதத்தை உணர்ந்திருத்தலாற் பயன் என்னை? இறையனார் களவியல் என்னும் பெயர் களவு கற்பு என்ற இரண்டு கைகோளும் அடங்கிய பொருளிலக்கண நூற்குப் பெயரானாற் போல நான்மறையென்பது நான்கு பகுப்பான களவியலை முதலான உடைய தமிழ்ப் பொருளிலக்கண நூலையே உணர்த்துமென்க. அகனைந்தினையிற் கற்பு இவ்வாறு தலைவனொருவனும் தலைவியொருத்தியும் களவினாற் கூடும் கூட்டம் சிலரால் அறியப்பட்டு அம்பல் ஆகியும், பலரால் அறியப்பட்டு அலராகியும் களவொழுக்கம் வெளிப்படுதல் உண்டு. இதனைத் தொல்காப்பியனார் மறை வெளிப்படுதல் என்பர். பின்னர் அவ்விருவரின் கள வொழுக்கத்தைத் தமர் அறிந்து அத்தலைவனுக்கே அத் தலைவியை மணச்சீர் நிகழ்த்தித் தருவர். இதனைத் தொல்காப்பியனார் தமரிற் பெறுதல் என்பர். இக்கற்பியலில் தமளிற் பெறுதல் முதன்மையான நிகழ்ச்சியாகும். இதனைத் தொல்காப்பியனார், "கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே என்னும் நூற்பாவால் புலப்படுத்துகின்றார். இந்நூற்பாவில் திருமணச் சடங்கினைக் கரணம் என்ற சொல்லால்