பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார். கரணம் என்ற சொல் செயல் என்று பொருள்படும். கொங்கு நாட்டு மக்கள் சடங்கினைச் சீர் என்று வழங்குவர். மிகப் பழங்காலத்தில் கரணம் என்னும் சடங்கு நிகழ்த்தப் பெறாமலேயே தலைவன் தலைவியர் வாழ்க்கை நிகழ்ந்ததென்றும், அவர்தம் கூட்டுறவில் பொய்யும் வழுவுட தோன்றிய பின்னரே ஊர்த்தலைவர்கள் கரணம் நடத்துட முறையைக் கற்பித்தனர் என்றும் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்பது அந்நூற்பாவாகும். தந்தையை ஐயன் என்பது கொங்கு நாட்டார் வழக்கு ஐயன் என்னும் சொல் மூத்தோர் (முதியோர்) என்னும் பொருளில் வருதலை, "குரவன் ஐயன் சுவாமி கோமானே அடிகள் அத்தன் பரவிய உரவோன் ஈசன் பதிஇறை மூத்தோன் பேராம்" என்னும் நிகண்டால் அறிக. ஐயர் யாத்தனர் என்பதற்கு அறிவாலும் ஆண்டாலும் பெரிய முதியோர் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். இக்கற்பு நெறியிற்றான் 'மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் என்னும் மருதத் திணை உரிப்பொருளும் பிரிதல் என்னும் பாலைத்திணையின் உரிப்பொருளும் மிக்குத் தோன்றும் என்று தொல் காப்பியனார் கருதுகிறார். "மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும் இவைமுத லாகிய இயற்நெறி பிழையாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்து கற்பெனப் படுமே" என்பது அவர் நூற்பாவாகும். அகத்திணைச் சமுதாயத்தில் அகத்திணைச் சமுதாயத்தின் தலைவன் தலைவி என்னும் இருவரும் தலைமை வாய்ந்தவராவர். அவ்விருவரது நல்வாழ்க்கைக்கு உறுதனையாவார் வாயில்கள்.