பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415 அகத்தினைச் சமுதாயத்தில் தலைவன் அகத்திணைச் சமுதாயத்தில் வரும் தலைவன் பெருமை வாய்ந்தவன்; உரன் உடையவன் என்பர். பெருமையாவது பழிக்கும் பாவத்திற்கும் அஞ்சுதல் என்றும் அறிவுடைமை என்றும் இளம்பூரணர் விளக்கம் கூறுவர். தொல்காப்பியனார் தலைவனுடைய இயல்புகளைப் பல இடங்களில் குறிப் பிடுகிறார். தன்னைப் புகழ்ந்து கூறிக் கொள்ளுதல் நன்றன்று என்பது அறிஞர் கொள்கை. ஆனால் தலைவன் வினைமேற் கொண்டொழுகும் பொழுது தலைவிமுன் தன்னைப் புகழ்ந்து பேசுவன் என்பர். அகத்தினைச் சமுதாயத்தில் தலைவி தொல்காப்பியனார் அகப்பொருட் சமுதாயத்தில் தலைவனுடைய பண்பைக் காட்டிலும், தலைவியின் பண்பினையே மிகுதியாக எடுத்துக் கூறுகிறார். தலைவ னிடத்தே பல நற்பண்புகள் இருப்பினும் அவற்றுள் அச்சமும் நானும் மடனுமே முந்துற்றுத் தோன்றும் என்பர். நாகரிகமில்லாத சிலரிடத்தே காமவேட்கை நிகழின் தங்கள் வேட்கையைப் புலப்படக் கூறி வெளிப்படுத்துவர். நாகரிகம் வாய்ந்த மக்கள் நுதலிய அகனைந்திணைத் தலைவி காமவேட்கையைப் புலப்படக் கூறாள். இதனைத் தொல் காப்பியனார். 'காமத் திணையின் கண்ணின்று வரூஉம் நானும் மடனும் பெண்மைய ஆதலின் குறிப்பினும் இடத்திலும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான" தலைவி தன் காமவேட்கையை வெளிப்படக் கூறுவாளே யானால் நாணமும் மடமும் கெடும். ஆதலின் அவன் வேட்கை குறிப்பாலும் இடத்தாலும் அல்லது நெறிப்பட நிகழாது என்பதாம். மேலும் ஐந்திணைத் தலைவி தன் காமவேட்கையைத் தலைவன் முன் கூறாள் என்று மற்றோரிடத்தில் அவர் கூறுகிறார்.