பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வெட்சி தானே குறிஞ்சியது புறன் என்றும் (1), வஞ்சி தானே முல்லையது புறன் என்றும் (6), உழிஞை தானே மருதத்துப் புறன் என்றும் (8), தும்பை தானே நெய்தலது புறன் என்றும், (12), வாகை தானே பாலையது புறன் என்றும் (15), காஞ்சி தானே பெருந்தினைப் புறன் என்றும் (18), பாடாண்பகுதி கைக்கிளைப் புறனே என்றும் (20) புறத்திணை ஏழினுடன் இயைபுபடுத்திக் கூறியுள்ள முறையினை உய்த்துணர்ந்தால், காமம் என்ற ஒன்று, அகத்தினை ஏழாகி, அவ்வகத்திணை ஏழிலும் ஏழு புறத்திணை தோன்றியுள்ளன என்று தொல்காப்பியர் கருது கின்றார் என்ற உண்மை புலனாகும். இக்கருத்துடன் சமயக் கருத்தொன்றினையும் ஒப்பிட் டறிய வேண்டும். மகாப்பிரளய காலத்திலே அசத்தும் இல்லை; சத்தும் இல்லை; அந்த ஒன்று இருந்தது. அதன் கண்ணே காமம் ஒன்று. சத்தி முதற்கண் உளதாயிற்று. அதனின்று முறைப்படி உலகம் தோன்றிற்று என்று சமய அறிஞர் கூறுவர். இக்கருத்து ஒப்புமைக்காகத் தரப்படுகிறது. மேற்கூறியவற்றால் காமங்கண்ணிய மரபு' என்பது அகத்திணை ஏழினையும் புறத்திணை ஏழினையும் குறிக்கும் என்று உணர்க. நான்காக விரிதல் இவ்வாற்றால், நோயும் இன்பமும் என்றும் துன்பியல் இன்பியல் நிகழ்ச்சிகள் இரண்டும் அகத் துன்பியல், அக இன்பியல், புறத் துன்பியல், புற இன்பியல் என்று நான்காக விரியும் என்க. = முப்பத்திரண்டாக விரிதல் இந்நான்கு நிகழ்ச்சியும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும்