பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 எட்டு மெய்ப்பாட்டோடு கூட, முப்பத்திரண்டாக விரியும். இவ்வாற்றால் அகத்திணைப் புறத்திணை இலக்கியமெல்லாம் இம்முப்பத்திரண்டு கூற்றுள் ஒன்றன்பாற்பட்டு அடங்கு மென்க. நோயும் இன்பமும் என்னும் இருவகை நிலையிலும் எட்டு மெய்ப்பாடு சிலர் எட்டு மெய்ப்பாட்டுள் இன்பத்திற்கு நகை, மருட்கை, பெருமிதம், உவகை வரும் என்றும் துன்பத்திற்கு அழுகை, இளிவரல், அச்சம், வெகுளி வரும் என்று கூறுவர். அவ்வாறு கொள்வது பொருந்தாது. இன்பத்திற்கும் எட்டு மெய்ப்பாடு வரும். துன்பத்திற்கும் எட்டு மெய்ப்பாடு வரும் என்க. நச்சினார்க்கினியரும் "நோயும் இன்பமும் என்னும் இருவகை நிலைக்களத்து எட்டனையும் சேர்க்கப் பதினாறாம். அவற்றை நெஞ்சொடு சேர்க்கப் பலவாம் என்றுணர்க" என்பர். மேற்கூறிய பதினாறினையும் அகத்திணை புறத்திணைகளிற் சேர்க்க முப்பத்திரண்டாம். அம்முப்பத்திரண்டிற்குரிய மெய்ப்பாட்டினைக் கீழே காண்க. முப் பத்திரண்டு எடுத்துக்காட்டு அகத்திணையில் நோய்பற்றிய நகைக்கு நகையா கின்றே தோழி. தண்டுறை யூரன் திண்டார் அகலம் வதுவை நாளணிப் புதுவோர் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட்டு எம்மனை புகுதந் தோனே. அதுகண்டு மெய்ம்மலி உவகை மறையினன் எதிர்சென்று இம்மனை அன்றஃது நும்மனை என்ற என்னுந் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சிவன் தொழுதுநின் றதுவே. (அகநானூறு 53) இது தலைமகன் பரத்தையிற் பிரிவால் நோயுற்றிருந்த தலைவிக்குப் பிறன்கட்டோன்றிய பேதைமை பொருளாக நகை தோன்றிற்று.