பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அகத்திணையில் நோய்பற்றிய அழுகை "குன்ற வைப்பின் என்றுழ் நீளிடை யாமே எமியம் ஆகத் தானே .. வருந்தினள் பெரிதழிந்து பானாட் கங்குலும் பகலும் ஆனா தழுவோள் ஆய்சிறு நுதலே' (அகநானூறு - 57) அகத்தினை நோய் பற்றிய இளிவரல் திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப் புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்ப பசலை பாய்ந்த நுதலேன் ஆகி எழுதெழில் மழைக்கண் கலுழ நோய்கூர்ந்து ஆதி மந்தியின் அறிவு பிறிதாகிப் பேறுற் றிசினே காதலம் தோழி.இ காடிறந் தனரே காதலர் ..... கலங்கின்று மாதுஅவர்த் தெளிந்த என் நெஞ்சே (அகநானூறு - 135) அகத்தினை நோய் பற்றிய மருட்கை மலர்தார் மார்பன் நின்றோன் கண்டோர் பலர்தல் வாழி தோழி அவருள் ஆரிருட் கங்குல் அணையோடு பொருந்தி ஒர்யா னாகுக தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே. அகநா. 82 (மருட்கையில் புதுகை) அகத்தினை நோய் பற்றிய அச்சம் ஒரூஉநீ ளங்கூந்தல் கொள்ளல்யாம் நின்னை வெரூஉதும் காணுங்கடை (கலித்தொகை 87)