பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

431 என்னும் நூற்பாவிற்கு நிலமும் காலமுமாகிய முதலொடு புணர்ந்த கந்திருவர்பாற்பட்டனவாகிய (ஐந்திணைக்காமம்) களவு உடன்போக்கு இற்கிழத்தி காமக்கிழத்தி காதற்பரத்தை என இட வகையால் ஐந்து வகைப்படும்" என்று உரை கூறியுள்ளார். ஐந்நிலம் நச்சினார்க்கினியர் இளம்பூரணர் உரையினின்று சிறிது மாறுபடுகின்றார். ஐந்நிலம் பெறுமே என்ற தொடர்க்கு இளம்பூரணர் எழுதிய உரையினைக் கொள்ளாத அவர் "முதற் கந்தருவம் ஐந்து உள்ளன அவ்வைந்துமேயன்றி அவற்றொடு பொருந்திவரும் கந்தருவ மார்க்கம் ஐந்தும் குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்து நிலத்தொடு பொருந்தி வரும்" என்று கூறி இவ்வைந்தனுடன் இளம்பூரணர் கூறியவாறே கந்தர்வம் ஒழிந்த ஏழினையும் கூட்டிப் பன்னிரண்டு என்பர். இளம்பூரணர் நச்சினார்க்கினியர் மாறுபாடு இளம்பூரணர் ஐந்நிலம் என்பதற்கு 1. களவு. 2. உடன் போக்கு, 3, இற்கிழத்தி 4. காமக்கிழத்தி, 5. காதற்பரத்தை என்று ஐந்து என்பர். நச்சினார்க்கினியர் உலகியல் பற்றி குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்து நிலத்திலும் நடக்கும் காந்தர்வ மணம் என்பர். இனி இவ்விருவர் கருத்தையும் ஆராய்வோம். இளம் பூரணர் (ஐந்நிலம்) என்பதற்குக் களவும், உடன்போக்கும் இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற்பரத்தை என ஐந்தினைக் குறிப்பிடுவர். இளம்பூரணர் கருதிய ஐந்துதான் ஐந்நிலம் என்பதற்கு வேறு தக்க சான்றில்லை. நச்சினார்க்கினியரே இக்கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. அது நிற்க, உடன் போக்கிற்குப் பாங்கிதான் நிமித்தமாவாள், இச்செய்திக்கு இலக்கிய இலக்கணச் சான்று ஏராளமாக உள்ளன. பாங்கன் நிமித்தமாதலுக்கு ஒரு சான்றும் இல்லையே. இவற்றை யெல்லாம் கருதினார் யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலத்திற் முன்றும் கைக்கிளைக் குறிப்பே" என்றதற்கு