பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 கூறிய முறைக்கு ஒத்தே உள்ளது. அம்முறைப்படி பாங்கன் நிமித்தமான பன்னிரண்டையும் இன்னவை என்று விளக்கி நூற்பா எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் எழுதாது விட்டார். அப்பன்னிரண்டும் இன்னவை என்று வேறு எங்கும் சுட்டப்படவில்லை. அதனால் உரை எழுதுபவர் கட்கு இந்த இடம் விளங்காமலிருந்திருக்க வேண்டும். விளங்காத இடத்தை விளக்கவில்லை என்று உரை யாசிரியர்கள் பெரும்பாலும் சொல்வதில்லை, அந்த முறையில் இளம்பூரணர், 'பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப" என்னும் நூற்பாவிற்குப் பலவகை மணத்தில் பாங்கராயினார் துணை (நிமித்தம்) ஆகுமிடம் இத்துணை என வரை யறுத்தணர்த்துதல் நுதலிற்று" என்று கருத்துக் கூறிவிட்டு " பாங்கராயினார் துணையாகக் கூடுங் கூட்டம் பன்னிரண்டு வரை" என்று பொழிப்புரை எழுதி, நிமித்தம் என்பது நிமித்தமாகக் கூடுங்கூட்டம்; அக்கூட்டம் நிமித்தமென ஆகுபெயராய் நின்றது. பாங்கராற் கூட்டம் பாங்கர் நிமித்தமென வேற்றுமைத் தொகையாயிற்று. அவையாவன:பிரமம் முதலிய நான்கும் கந்திருவப் பகுதியாகிய களவும், உடன்போக்கும் அதன் கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும் காமக்கிழத்தியும் காதற்பரத்தையும் அசுரம் முதலாகிய மூன்றும் என இவை" என்று விளக்கவுரையும் எழுதியுள்ளார். பின்னர் "முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே' என்ற நூற்பாவைத் தந்து எண்வகை மனத்தினுள்ளும் முன்னையவாகிய அசுரம் இராக்கதம் என்னும் மூன்றும் கைக்கிளைப்பாற்படும் என்றனர். இதன் பின்னர் 'பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே! என்ற நூற்பாவிற்கு " எண்வகை மணத்தினுள்ளும் பிரமம் முதலிய நான்கும் பெருந்தினைப்பாற்படும்" என்று உரை எழுதினர். இதன் பின்னர் 'முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலிருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே