பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429 பிங்கல நிகண்டு என்னும் நூல் பதினெண் கணங்களின் பெயர்களை 'அமரர் சித்தர் அசுரர் தைத்தியர் கருமர் சின்னரர் நிருதர் கிம்புருடர் காந்தர்வர் இயக்கர் விஞ்சையர் பூதர் பசாசர் அந்தரர் முனிவர் உரகர் ஆகாய வாசரியர் போகபூ மியரெனப் பாடு பட்டன பதினெண் கணமே" என்று கூறுகின்றது. எனவே பதினெண் கணங்களின் சிலருடைய பெயரால் இம்மணங்கள் பெயர் பெறுகின்றன என்பது தெரிகின்றது. தொல்காப்பியர் கூறுவது இனித் தொல்காப்பியர் கூறுவதைப் பார்ப்போம். அவர் காம ஒழுக்கத்தை அகத்திணை என்று கூறுகிறார். அவ் அகத்திணையைக் கைக்கிளை என்றும் ஐந்திணை என்றும் பெருந்திணை என்றும் மூன்றாகப் பிரித்துக் கொள்ளுகிறார். இந்த மூன்றுள் கைக்கிளை மூன்று வகையாகவும் ஐந்திணை ஐந்து வகையாகவும் பெருந்தினை நான்கு வகையாகவும் பிரிக்கப்பட்டுப் பன்னிரண்டாக வழங்கின. இப்பன்னிரண்டு பிரிவிற்கும் பாங்கன் நிமித்தமாயிருப்பான் என்று செய்தியை, 'பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப" என்ற நூற்பாவால் தொல்காப்பியர் கூறுகின்றார். தொல்காப்பியர் மேல் நூற்பாவால் பாங்கன்நிமித்தம் பன்னிரண்டு என்று கூறி, அப்பன்னிரண்டுள் முன்னே கூறப்பட்டுள்ள மூன்றும்கைக்கிளைக் குறிப்பாகவும் பின்னே கூறப்பட்டுள்ள நான்கும் பெருந்திணையாகுமென்றும் இடையில் கூறப்பட்ட ஐந்தும் ஐந்திணை பெறும் என்றும் கூறுகிறார். களவியலில் அவர் இவ்வாறு கூறிய முறை, "கைக்கிளை முதலாப் பெருந்தினை இறுவாய் முற்படக் கிளந்த எழுதினை என்ப" என்று அகத்திணையியலில்