பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 'எச்சார்க் கெளியர் இயைந்த காவலர் பொச்சாப் பெய்திய பொழுதுகொள் அமையத்து மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பின் உசாவார்க் குதவாக் கேண்மைப் பிசாசர் பேணிய பெருமைசால் இயல்பே" "இடைமயக்கம் செய்யா இயல்பினில் நீங்கி உடைமயக்கி உட்கறுத்தல் என்ப - உடையிது உசாவார்க் குதவாத ஊனியா யாக்கைப் பிசாசத்தார் கண்டமணப் பேது" என்பர் நச்சினார்க்கினியர். இளம்பூரணர் களியத்தார் மாட்டும், துயின்றார் மாட்டும் கூடுதல், இதற்குப் பேய்நிலை என்று பெயர். யாப்பருங்கல விருத்தியாசிரியர் துஞ்சினாரோடும் மயங்கினாரோடும் களித்தாரோடும் செத்தாரோடும் விலங்கி னோடும் இழிதரு மரபில் யாருமில்லா ஒருசிறைக்கண் புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம் என்பர். 'அஞ்சல் களித்தல் மயங்குதல் மாழாத்தல் அஞ்சல்அறிவழிதல் சாதலென் - றெஞ்சினவும் இன்ன திறத்தான் இழிதக வெய்துபவேல் பின்னைப் பிசாசமணப் பேர்" "குணத்தில் இழிந்த மயங்கியவ ரொடும் பிணத்தினும் விலங்கினும் பிணைவது பிசாசம்" என்பர். மேற்கூறியவை வடமொழியாளர் கூறும் மணவகை என்பது மேலே கூறப்பட்டது. இவ்வெட்டுள் பிரமம் முதலிய நான்கும் பார்ப்பனர்கட்கு உரியது என்று யாப்பருங்கல விருத்தியாசிரியர் கூறுகிறார், மற்றைய நான்கும் எவர்க்குரியன என்பதை அவர் கூறவில்லை, ஆனால், அவற்றிற்குக் காந்தர்வம் அகரம் இராக்கதம் பைசாசம் எனப் பெயர்கள் கூறப் பட்டுள்ளன. இப்பெயர்கள் காந்தர்வர் அசுரர் இராக்கதர் பைசாசர் என்பவரைக் குறிக்கும். |