பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427 இளம்பூரணர் வில்லேற்றினானாதல் திரிபன்றியெய் தானாதல் இவளை இவன் கோடற்குரிய னெனக் கூறிய வழி, அது செய்தார்க்குக் கொடுத்தல் என்பர். யாப்பருங்கல விருத்தியாசிரியர் இன்னது செய் தார்க்கு இவள் உரியன் என்றவிடத்து அல்லது செய்து எய்துவது, அவை வில்லேற்றுதல் திரிபன்றி எய்தல் கொல்லேறு கோடல் முதலியன, என்னை 'வில்லேற்றல் வேள்வியைக் காத்தல் மிகுவலிக் கொல்லேற் றியல்குழையைக் கோடலென் - றெல்லாம் அரியனசெய் தெய்தினான் ஆயின் அசுரம் அரியவாம் அந்த மணம்' என்பர். இராக்கதமாவது:- தலைமகள் தன்னிலும் பெறாது, தமளிலும் பெறாது வலிதிற் கொள்வது. 'மணிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர் வலிதிற்கொண் டாள்வதே என்ப- வலிதிற் பராக்கதம் செய்துழலும் பாழி நிமிர்தோள் இராக்கதத்தார் மன்றல் இயல்பு" என்பர் நச்சினார்க்கினியர். இளம்பூரணர் தலைமகன் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது இராக்கதம் என்பர். யாப்பருங்கல விருத்தியாசிரியர் ஆடை மேலிடுதல் பூமேலிடுதல் கதவடைத்தல் முதலியவற்றால் வலிதிற் கோடல் | 2 டி "பூந்துகிலோ டின்னவுமேல் இட்டும் புதவடைத்தும் பாய்ந்து கதந்தாஅய்ப் பற்றிக்கொண் டேந்திழையை எய்தப் படுவ திராக்கதம் என்பதே மைதீர்ந்தார் சொல்லும்மணம்" என்பர். பைசாசமாவது:- மூத்தோர், கள்ளுண்டு மயங்கியோர் துயின்றோர்ப் புணர்ச்சியும் இழிந்தோளை மணம் செய்தலும் ஆை மாறுதலும் பிறவுமாம்.