பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 ஆரிடமாவது:- தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை மணமக்களை நிறுத்திப் பொன் அணிந்து நீவிரும் இவை போல் வாழ்விராக என நீர்வார்த்துக் கொடுப்பது, என்பர் நச்சினார்க்கினியர். ஒன்றானும் இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக் கொண்டு மகனைக் கொடுப்பது என்றும், இதற்குப் பொருள்கோள் என்று மற்றொரு பெயர் உண்டு என்றும் இளம்பூரணர் கூறுவர். தெய்வமாவது:- பெருவேள்வி வேட்கின்றார் பலருள் ஒருவற்கு அவ்வேள்வித்தி முன்னர்த் தக்கினையாகக் கொடுப்பது என்பர். இவை நான்கும் அந்தணர்க்குரியன என்று கூறும் யாப்பருங்கல விருத்தியுரை. காந்தர்வமாவது:- கந்தர்வர் என்னும் ஒரு கூட்டத் தாரிடத்தே நிகழும் காம நிகழ்ச்சி என்று பொருள்படும். இதனை நச்சினார்க்கினியர் ஆடவரும் பைம்பூணவரும் தமக்குள் கண்ணெதிர் நோக்கொத்துக் கைகலந்து உள்ளம் நெகிழச் சேர்வதாகும் என்பர். இளம்பூரணர் ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம் என்பர், யாப்பருங்கல விருத்தி யாசிரியர் ஒத்த குலமும் குணமும் அழகும் அறிவும் பருவமும் உடையார் யாருமில ஒரு சிறைக்கண் அன்பு மீதுாரத் தாமே புணர்ந்தொழுகும் ஒழுக்கம் என்பர். அகரம் அல்லது அகரம்: கொல்லேறு கோடம் திரிபன்றியெய்தன் வில்லேற்றுதல் முதலிய செய்து தலைவன் தலைவியை மணந்து கோடல். "முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத் தகைநலங் கருதும் தருகிளிர் உளரெனின் இவைஇவை செய்தாற்கு எளியன்மற் றிவளெனத் தொகை நிலை உரைத்த பின்றைப் பகையளித்து அன்னை ஆற்றிய அளவையில் தொல்நிலை அசுரத் துணிந்த வாறே' என்பர் நச்சினார்க்கினியர்.