பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425 மனம் எனவே திருமணம் என்னும் தமிழ்ச் சொல்லிற்கும் விவாகம் என்னும் வடசொல்லிற்கும் பொருள் ஒன்றில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இனித் திருமணத்தைப் பற்றி ஆராய்வோம். வடமொழி அறிஞர் மணம் நடைபெறும் புறச்செயல் முறைகளை அடிப்படையாகக் கொண்டு மணத்தினை எட்டென்று பிரித்துக் கூறுகின்றனர். தமிழ் அறிஞர் மனப்பவர்தம் அகநிகழ்ச்சியாகிய அன்பினை அடிப்படையாகக் கொண்டு மூன்றாகப் பகுத்தோதியுள்ளார். எனவே இந்த வகையிலும் தமிழர்தம் திருமணப் பகுப்பிற்கும் வடமொழியாளர் கூறும் திருமணப் பகுப்பிற்கும் அடிப்படைக் காரணம் ஒன்றாக இல்லை. வடமொழியாளர் கூறும் எண்வகை மணம்: வடவர் கூறும் மணம் எட்டென்று மேலே கூறினோம். அவ்வெட்டும் 1. பிரமம், 2. பிரசாபத்தியம்: 3. ஆரிடம்: 4. தெய்வம்: 5. காந்தர்வம், 6. ஆசுரம், 7. இராக்கதம்: 8. பைபசாசம் எனப் பெயர் பெறும். அவற்றுள் பிரமமாவது:- ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியம் காத்தவனுக்குப் பன்னி ராட்டைப் பருவத்தளாய்ப் பூப்பு எய்தவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்துவதற்குமுன் அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது என்பர் நச்சினார்க்கினியர். இதற்கு அறன்நிலை என்று ஒரு பெயரும் உண்டு. பிரசாபத்தியமாவது:- மகன் கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டி தம்மகட்கு வந்து மகளைக் கொடுப்பது என்பர் நச்சினார்க்கினியர். மகள் கோடற்குரிய கோத்திரத்தார் மகள் வேண்டிய வழி இரு முது குரவரும் இயைந்து கொடுப்பது என்பர் இளம்பூரணர். இதனை விரிமணம் என்பர். யாப்பருங்கல விருத்தி ஆசிரியர். இதற்கு ஒப்பு என்றொரு பெயரும் உண்டு.