பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435 அடிமுதல் 80 வரை உள்ள அடிகளில் வஞ்சித்திணை ஒழுக்கத்தையும் மீண்டும் 80 முதல் 103 வரை உள்ள அடிகளில் தலைமகள் இல்லிருத்தலையும், கார்காலச் சிறப்பையும், தலைமகன் திரும்பி வருகின்ற செய்தியையும் அமைக்கின்றார் ஆசிரியர் நப்பூதனார். நினைந்து அவள் புலம்பல் வினையையே உயிராகக் கொண்ட தலைமகன் கருங்கடல் மேய்ந்த கமஞ்சூல் எழிலி இருங்கல் இருவரை ஏறி யுயிர்க்கும் பெரும்பதக் காலையில் திரும்பி வருவதாகக் கூறிச் செல்கின்றான். அவன் கூற்றில் நம்பிக்கை வைத்து அவளும் அவன் பிரிவை ஆற்றியிருக்கின்றாள். இமிழிசை வானம் முழங்குகின்றது. கல்லோங்கு கானம் களிற்றின் மதம் நாறுகிறது. முல்லை மலர்கள் செவ்வியுடையவாகின்றன. கார்கண்ட தலைமகள் தலைமகன் தேர்காணாமல் வருந்து கின்றாள். இவ்வாறு தலைமகள் வருந்துகின்ற வருத்தத்தைக் கண்ட பெருமுது பெண்டிர், நலந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொரித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலைக் முல்லை. 1-6. காலத்தில் அருங்கடி மூதுார் மருங்கிற் சென்று யாழிசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு நாழி கொண்ட நறுவி முல்லை. அரும்பவிழ் அலரி முதலியவற்றைத் துாவிக் கைதொழுது விரிச்சி கேட்கும் பொருட்டு நிற்கின்றனர். இந்நிலையில் முல்லைநிலப் பெண் ஒருத்தி பால் உள்ளுமை காரண்மாகக் கலங்கித் துன்புறுகின்ற இனிய பசுங்கன்றை நோக்! " உங்கள் தாயர் இடையர்களைப் பின்னே இருந்து செலுத்த இப்பொழுதே வந்துவிடும்" என்று கூறுகின்றார். |