பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுர்ே அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போன் நன்னர் நன்மொழி கேட்டணம் - முல்லை. 12-17 இவ்வாறு அவர்கள் விரிச்சி கேட்டமையால் மகனும் தன்செயலை இனிதே முடித்து ஒன்னார்ப் பணித்துத் திறை பெற்றுவிரைந்து வருவன் எனத் தலைவியைப் பலவாறு ஏதுக்கள் கூறி வற்புறுத்தவும் அவள் ஆற்றமாட்டாமல் வருந்து கின்றாள். அவள் பூப்போன்ற கண்களினின்றும் முத்துப் போன்ற கண்ணிர்த் துளிகள் துளிர்த்து நிற்கின்றன. நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனைகவர்ந்து கொண்ட திறைய வினைமுடித்து வருதல் தலைவர் வாய்ந்து நீநின் பருவரல் எவ்வம் களையாயோ யெனக் காட்டவும் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து பூப்போ லுண்கண் புலம்பு முத்துறைப்ப - முல்லை . 16-24 தலைவி தனிமைத் துயரில் வாடுகின்றாள். இவ்வாறாக முல்லைப்பாட்டு ஆசிரியர் நப்பூதனார் பாடலில் தொடக் கத்தில் முதல் இருபத்து மூன்று அடிகளில் முல்லைத்தினை ஒழுக்கமான இருத்தலை மிக அழகாக அமைத்துச் செல்கின்றார். வஞ்சி ஒழுக்கம் பாடலில் முதற்பகுதியில் தலைவியின் ஆற்றாமை நிலையைக் கூறியவர் அடுத்த பகுதியில் வஞ்சி ஒழுக்கத்தை - எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்து அஞ்சுதகச் சென்று அடல் குறித்த செயலை விளக்குகின்றார். வேந்து வினை காரணமாகப் பிரிந்த தலைமகன் பாசறை அமைத்து அப்படி வீட்டில் தங்கியிருந்தமையை - பாசறை நிலையை மிகத் தெளிவாக விளக்கிச் செல்கின்றார்.