பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

437 பாசறை அமைப்பு போர்மேற் சென்ற தலைமகனும் அவன் வீரர்களும் காட்டாது சூழ்ந்த அகன்ற நெடிய புறவில் சேனாது பிடவம், பசிய துறுகளையும் வெட்டி, அங்கிருந்த வேட்டுவரின் அரண்களையும் அழித்துக்காட்ட முள்வேலி யாகிய மதிலினை அமைத்து அதன் அகத்தே கடல்போல் பரந்த பாடி வீட்டினை அமைக்கின்றனர். இதனை, கான்யாறு தழிஇய அகனெடும் புறவில் சேணாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி வேட்டுப்புழை யருப்பம் மாட்டிக் காட்ட இடுமுட் புரிசை ஏமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பசந்த பாடி - முல்லை. 24-28 என்ற முல்லைப்பாட்டுப் பகுதியால் தெளியலாம். யானைப்பாகர் செயல்கள் இவ்வாறு அமைத்த பாசறையின் உட்பகுதியில் உவலைக் கூரை ஒழுகிய தெருவில் நாற்சந்தி கூடுமிடத்தில் காவலாக நிறுத்தப்பட்ட தேம்படு கவுளயானை கரும்பொடு நெருங்கக் கட்டிய நெற்கதிர்களையும், அதிமதிரத் தழையை யும் உண்ணாமல் அவற்றினால் நெற்றியைத் தேய்த்துக் கொண்டும், அயில்துனை மருப்பில் தம் கையிடைக் கொண்டும் நிற்றலைக் கண்ட யானைப் பாகர் கவைமுட் கருவியால் வடமொழி பயிற்றி அதனை உண்ணுமாறு செய்கின்றனர். உவலைக் கூரை யொழுகிய தெருவில் கவலை முற்றம் காவல் நின்ற தேம்படு கவுள சிறுகண் யானை ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைத் தியாத்த வயல்வினை யின்குளருண்ணாது நுதல்துடைத்து அயில்துணை மருப்பிற் நம் கையிடைக் கொண்டென கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்ப - முல்லை. 29-36 என்பது முல்லைப்பாட்டு.