பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 யவனரும் மிலேச்சரும் அரசனின் இருக்கையில் உள்நாட்டு மெய்க்காப் பாளர்கள் மட்டுமின்றி அயல்நாட்டுக் காப்பாளர்களும் இருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு உணர்த்தி நிற்கிறது. அரசன் பள்ளியறையில் அகப்பணி செய்தற்கு அயல்நாட்டுக் காப்பாளர் அமைந்திருந்தனர். இவ்வயல் நாட்டுக் காப்பாளர் களில் மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் என்பவர்கள் ஒருவகையினர். உடன்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர் என்பவர்கள் ஒருவகையினர். இவர்கள் புலித்தொடர் விட்ட புனைமாண் நல்லில்லில் மணிவிளக்கை எரிய வைத்துக்கொண்டு திண்நாண் எழிலி வாங்கிய ஈரறைப் பள்ளியுள் உள் அறையாகிய பள்ளி அறையின்கண் அரசனின் உழையராய் இருந்து காவல் புரிகின்றனர். மன்னன் மனநிலை இவ்வாறாகப் பாசறையில் இருந்த மகளிர், மெய்க் காப்பாளர், நாழிகைக் கணக்கர், யவனர், மிலேச்சர் இவர்கள் சூழ இருந்த மன்னனின் மனநிலையை அடுத்து உரைக் கின்றார். வினைமுற்றியிருந்த தலைமகன் பகைமேற் செல்லும் விருப்பத்தால் உறக்கங் கொள்ளாமல், முன்னாளில் பகைவர் எறிந்த வேல் நுழைந்தமையால் புண்கூர்ந்து அதனால் வருத்தமுற்றுத் தம் பெண்யானைகள் மறந்த களிற்று யானை களை நிலைத்தும், யானைகளின் பாரிய கைகளை வெட்டி வீழ்த்தித் தாம் அணிந்த வஞ்சின மாலைக்கு வெற்றி உண்டாகும்படிச் செஞ்சோற்றுக்கடங் கழித்த மறவர்களை நினைந்தும், வைத்துணை பகழி மூழ்கலினால் புல் மிகுந்து அத்துன்பத்தால் புல்லுண்ணாமல் செவிசாய்த்து வருத்து கின்ற குதிரைகளை நினைந்தும்,