பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இழையணி ஆயமொடு தருநாள் தடைஇத் தைத்திங்கள் தண்கயம் படியும் பெருந்தோள் குறுமகள் அல்லது மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே (நற்றிணை 80) அகத்தினை இன்பம் பற்றிவந்த மருட்கை பொன்னும் மணியும் போல (நற்றிணை 166) அகத்தினை இன்பம் பற்றி வந்த அச்சம் சேறும் சேறும் என்றலின் பலபுலந்து செல்மின் என்றால் யானஞ் சுவலே செல்லா தீமெனச் செப்பில் பல்லோர் நிறுத்தெறி புன்சொலின் திறத்தஞ் சுவலே அதனால், செல்மின் சென்றுவினை முடிமின் சென்றாங்கு அவன்நீ டாதல் ஒம்புமின் யாமத்து இழையணி ஆகம் வடுக்கொள முயங்கி உழையீ ராகவும் பணிப்போள் தமியே குழைவான் கண்ணிடத்து ஈண்டித் தண்ணென வாடிய இளமழைப் பின்றை வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே. (நற்றிணை 229) அகத்தினை இன்பம் பற்றி வந்த பெருமிதம் மையற விளங்கிய மணிநிற விசும்பின் கைதொடு மரபின் இளமீன் போலப் பெருங்கடற் பரப்பின் இரும்புறந் தோயச் சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும் துறைபுலம் புடைத்தே தோழி பண்டும் உள்ளுர்க் குரீஇக் கருவுடைத் தன்ன பெரும்போ தவிழ்ந்த கருத்தாட் புன்னைக் கானலங் கொண்கன் தந்த காதல் நம்மொடு நீங்கா மாறே. (நற்றினை 131)