பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 பட்டினப்பாலை கூறும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் என்னும் அடியுடன் கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு ւDո ն)յ கொள்ளுவோம் என்னும் பாரதியார் பாடல் அடி ஒத்திருத்தலைக் காண்க. 'தினை மயக்கம் என்பது ஒர் திணைப்பொருள் மற்றோர் திணையிலே சென்று கலத்தலைக் கூறுவதாகும். அத்தினை மயக்கத்தைச் சமுதாய நோக்கமுடையது என்று ஆழ்ந்து கருதிய பாரதியார் அதனை அழகான ஒலி அமைப் புடைய பாடலில், நல்ல வடிவு தந்து உணர்ச்சி பொங்கி வழியக் கற்பனை மிகச் சிறந்து விளங்கப் பாடியுள்ளார்.