பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453 சேரனாட்டு யானைத் தந்தங்களை அப்பாடல்கட்குப் பரிசாகக் கொடுப்போம் என்கின்றார். இதனால் அவர் உணர்த்தக் கருதியது என்னவெனில், பாரத நாட்டில் பல மொழி வழங்கி வருகின்றன. அதனைப் பேசும் ஒவ்வொரு வரும். தங்கள் தங்கள் மொழியினையே சிறந்ததென்று கருதியிருந்துவிடுதல் உண்டு. பாரத நாட்டுள் ஒரு மொழியைப் பேசும் ஒருவர் தம் நாட்டுள்ள ஏனைய மொழிகளையும் அறிந்து அம்மொழி இலக்கியங்களைப் பாராட்டக் கூடிய விரிந்த் நோக்கம் உடையவராக இருத்தல் வேண்டும் என்னும்’ கருத்தினையாகும். "சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து' என்று மேற்கூறியதும் இக்கருத்தினையேயாகும். சங்ககாலப் புலவராகிய கடியலூர் உருத்திரங்கண்ண னார் என்பவர் தாம் பாடிய பட்டினப்பாலையில் 'நீரின் வந்த நிமிர்ப்பரிப் பரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிலும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு' (பட்டினப்பாலை 185-193) என்னும் பகுதியால் இத்திணைமயக்கத்தை மிக அழமாகக் கூறுகிறார். காவிரிப்பூம்பட்டினத்து வாணிபத் தெருவில் கடல்வழியாக வந்த அயல்நாட்டுப் பொருள்களும், கடலிடத்தே தோன்றும் பொருள்களும், பல மலையிடத்தே தோன்றிய பொருள்களும், ஆற்றுப்படுகளில் தோன்றிய பொருள்களும் ஆகிய அரியவும், பெரியவுமான பொருள் களெல்லாம் வந்து அவ்வளம் இடந்தொறும் மயங்கிக் கிடக்கின்றன என்று கூறுகிறார்.