பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 'சிந்துநதி வெள்ளத்தின் மேலே வெண்ணிலா வீசும் பொழுது சேரனன்னாட்டிற் பிறந்த நல்ல இளம் பெண் களுடன் சேர்ந்துக் கொண்டு கவிஞர் தெலுங்கில் காதற் பாட்டிசைத்துத் தோணியோட்டி விளையாடிடுவோம்' என்று பாடுகிறார். இது நல்ல கருத்தமைந்த பாடலாகும். பாரதி, தமிழ்நாட்டிலே பிறந்தவர்; தென்நாட்டவர். இவர் விளையாடுவதற்குத் தன்னாட்டிலே உள்ள பெண் களைத் தேர்ந்தெடுக்காமல் தமிழின் துணைமொழியாகிய மலையாள மொழி பேசும் சேரனாட்டிளம் பெண்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறார். இவர்கள் தமிழிலும் பாட்டுப் பாடாமல் மலையாளத்திலும் பாட்டுப்பாடாமல் தங்கள் இருமொழிக்கும் துணையாக உள்ள கவின்தெலுங்கில் காதற்பாட்டினைப் பாடுகின்றனர். ஆனால் தோணிவிட்டு விளையாடுமிடம் வடக்கே உள்ள சிந்துநதியாகும். பாரதியார் மேற்காட்டிய இப்பாடற்பகுதியை, 'பாரத நாட்டு மக்கள் எல்லோரும் பாரதநாடு முற்றிலும் தங்கு தடையில்லாமல் இயங்கி அவர்கள் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருத்தல் வேண்டும் என்ற சமுதாய நலத்தை அறிவுறுத்தக் கருதியே பாடுகின்றனர். தென்னகத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய மொழிகளைப் பேசுவோர் தம்முள் வேறுபாடு கருதாது ஒருவர் மொழியை மற்றொருவர் கற்க வேண்டும் என்பதும் அவர்தம் கருத்தாகும். அடுத்து அவர் கூறியுள்ள பாடற்பகுதியையும் பார்ப் போம். கங்கையாற்றில் புறத்தே விளையும் கோதுமைப் பண்டத்தைத் தெற்கே காவிரியாற்றுப் பக்கத்தே விளையும் வெற்றிலைக்குப் பண்டமாற்றுப் பொருளாகக் கொள்வோம் என்கின்றார். இதனாலே பாரத நாட்டுள் உள்ள எல்லாமாநிலங்களும் ஒன்றென்றே கருதப்பட்டு அங்கே பண்டமாற்றுமுறை எளிமையாக அமைய வேண்டும் என்றும் கருதுகிறார். அதன்பின் 'சிங்கம்போன்ற ஆற்றல் வாய்ந்த மராட்டியர்தம் வீரக் கவிதைகளை நாம் கேட்டு, சிங்கம் உண்ண விரும்புவது யானையை அல்லவா, அதனால், -