பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451 பரிசிலாக ஏராளமாகப் பொன்னைச் சொரிந்ததாம். இதுபோல நம் கலையை அயல்நாட்டிலே சென்று பரப்புபவர்கட்கு நம் நாட்டு மக்கள் மிகுதியான பொருளைத் தந்து உதவ வேண்டும் என்பது அவர் கருதிய குறிப்பாகும். பாரதியாரின் திணைமயக்கம்: தொல்காப்பியனார் ஒரு திணையிலே தோன்றிய கருப்பொருள் வேறொரு திணையிலும் சென்று கூடும். சில சமயத்தில் கூடாமலும் இருக்கலாம் என்று இரண்டு நிலையினைக் கருத்தில் வைத்துக் கொண்டு உரிப்பொருள் இல்லன மயங்கவும்பெறுமே என்று உம்மை வைத்து நூற்பாவை இயற்றியுள்ளார். இத்தினை மயக்கத்தைச் சில புலவர் புனைந்துரையாகவும் சிலர் புனைந்துரையுடன் சமுதாய நோக்கத்தைச் சேர்த்தும் பாடியுள்ளனர். ஆனால், பாரதியார் அவர்கள் ஓரிடத்துப் பொருள், மற்றோரிடத்திற்குச் சென்று பயன்படுவதாகக் கூறும் திணைமயக்கம் சமுதாய மேம்பாட்டிற்கும், ஓரிடத்து மக்கள் மற்றோரிடத்திற்குச் சென்று குடியேறி வாழ்வதாகக் கூறும் திணைமயக்கம் சமுதாய ஒற்றுமைக்கும் வழி செய்யும் என்று கருதுகின்றார். அவர் பாடிய, 'பாரத தேசமென்று பெயர்சொல்லு வார்- மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்' என்ற பாட்டில், 'சிந்து நதியின்மிசை நிலவினிலே நல்ல சேரனன் னாட்டிளம் பெண்க ளுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டி சைத்தே தோணிக ளோட்டிவிளை யாடிடு வோம்' 'கங்கைந திப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்' என்ற பகுதிகளை எடுத்துக்கொண்டால், இப்பகுதி, திணை மயக்கம் கூறும் பாடலைப் போன்றதேயாகும்.