பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 'முல்லை வண்டுபோய் முல்லையாழ் முளரிவாய் மருதம் வல்ல வண்டினைப் பயிற்றிப்பின் பயில்வன மருதம்'(38) முல்லை நிலத்திலே உள்ள வண்டு மருதநிலத்திற்குச் சென்று அங்குத் தாமரைப் பூவினிடத்தே மருதப் பண்ணில் வல்ல வண்டினைச் சந்தித்து, முன்னே அதற்குத் தன்முல்லைப் பண்ணினைக் கற்றுக் கொடுத்து விட்டுப், பின் அவ்வண்டி னிடத்தே மருதப்பண்ணைப் பயில்கின்றதாம். என்னே புலவரின் கற்பனை இக்கற்பனையால் உயர்ந்த இலக்கினைப் புலவர் அறிவுறுத்துகின்றார். ஒரு கலையிலே வல்லவன் மற்றொரு கலை வல்லோன் இருக்குமிடம் சென்று அவனுக்குத் தன் கலையைக் கற்பித்து விட்டு அவன் கற்ற கலையைத் தானும் கற்பது என்ற முறை கலைவல்லோரிடம் காணப்பட்டால் அது மிகச் சிறந்ததன்றோ? அது போலவே ஒரு தமிழன் வேற்று மொழி வழங்கும் நாட் டிற்குச் செல்வானேயானால் தன் தமிழை அங்குள்ளவர்க்கு நன்கு சொல்லிக் கொடுத்துவிட்டு அவர்கள்பால் அவர்கள் மொழியையும் நன்கு கற்றால் மொழிப்பூசல் உண்டாகுமோ? பரஞ்சோதியார் கூறிய திணை மயக்கம் வெரும்புனைந்துரை யன்றோ? சமுதாய நலத்தை அடிப்படையாகக் கொண்டதாம் 'கரும்பொற் கோட்டினம் புன்னைவாய்க் கள்ளுண்டு காளைச் கரும்பு செவ்வழிப் பாண்செயக் கொன்றைபொன் சொரிய' மேற்கூறிய திணைமயக்கப் பொருள்களுக்குமேல் இங்கே கூறிய திணை மயக்கம் சற்று மேலே செல்கின்றது. முல்லை நிலத்து ஆண் வண்டு நெய்தல் நிலத்திற்கு போய் அங்குள்ள புன்னை மரப் பூக்களிலே தேனை உண்டது. நெய்தல் நில மக்களெல்லாம் கேட்குமாறு செவ்வழிப் பண்ணை அழகாகப் பாடிற்று. இச்செயலை முல்லை நிலத்திலே உள்ள கொன்றை கண்டது. அக்கொன்றை தேசிய உணர்ச்சி கொண்டு, நம் திணைப் பண்ணை அயல் திணையிலும் சென்று பாடிப் பரப்பும் இவ்வண்டின் செயல் அரிய செயலாகும் என்று கருதி, அவ்வண்டிற்குப்