பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

449 எனவே ஒர் திணைக்குரிய கருப்பொருள்கள் மற்றொரு திணையிலே சென்று மயங்கினால் (கலந்தால்) அதனை அறிஞர் திணைமயக்கம் என்று கூறுகின்றனர் என்பதை உணர்ந்தோம். இத்திணை மயக்கம் சங்ககாலப் புலவருடைய பாட்டிலும் பிற்காலப் புலவர் பாட்டிலும் மிக்க சுவை யாகக் கூறப்பட்டிருக்கின்றது. 'கொடிச்சியர் புனத்தயற் குறிஞ்சி நெய்பகர் இடைச்சியர் கதுப்பயல் கமழும்; ஏழையர் கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த் தொடுத்தலர் பிணையலார் குழலுள் தோன்றுமே! கொடிச்சியர் காவல் புரியும் தினைப்புனத்தில் பக்கத்தே மலர்ந்த குறிஞ்சி மலர்கள், அங்கு நெய் விற்க வந்த முல்லை நிலப் பெண்களாகிய இடைச்சியர்தம் கூந்தற் பக்கத்தே அணியப்பட்டு விளங்கும். -- மருதநிலம் பெண்களாகிய கடைச்சியரால் களையாகப் பறிக்கப்பட்டு எறியப்படும் குவளைமலர்கள் நெய்தல் நிலப் பெண்களின் கூந்தலுள் தோன்றுகின்றன. 'கலவர்தம் சிறுபறை இசையிற் கைவினைப் புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே; குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குபல் உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே' நெய்தல் நிலத்திலே கலங்களையுடைய பரதவர் முழக்கும் சிறுபறை இசையினாலே மருதநிலத்தே கள்ளுண்ட களியர்தம் குரவைக் கூத்து நிகழப் பெறும். அதுபோல முல்லைநிலத்துக் கோவலர் ஊதும் கொன்றையந் தீங்குழல் இசையினைக் கேட்டுக் குன்றிலுள்ள ஆசுணமா மயங்கி உறங்கும். மேற்கூறிய திணை மயக்கத்தினைத் தோலாமொழித் தேவர் என்பார் தாம் . இயற்றிய சூளாமணி என்னும் இலக்கியத்தில் நாட்டுப்படலத்தே இவ்வாறு கூறியுள்ளார். பரஞ்சோதியார் தாம் இயற்றிய திருவிளையாடற் புராணத்தே நாட்டுப்படலத்திற்கூறிய திணைமயக்கத்திற் சில: