பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 அவ்வாறு வரும்பொழுது குறிஞ்சித்திணை முதலிய ஐந்தும் இன்ன இன்ன முதற்பொருள் பற்றியும், இன்ன இன்ன கருப்பொருள் பற்றியும், இன்ன இன்ன உரிப்பொருள் பற்றியும் வரும் என்று கூறுகிறார். குறிஞ்சி, முதலான ஐந்து திணைகட்கு முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்னும் முப்பொருள்களை உரிமையாக்கிய தொல்காப்பியனார் பின்னர், 'உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (அகத்திணையியல்-15) என்னும் நூற்பாவால் திணைமயக்கம் கூறுகின்றார். இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் உரிப்பொருள் அல்லாத கருப்பொருளும் முதற்பொருளும் மற்றொரு திணையோடு சேர நிற்கவும் பெறும். உம்மை எதிர்மறை யாகலான் மயங்காமை பெரும்பான்மையாம். எனவே 'உய்த்துக் கொண்டுணர்தல்' என்னும் தந்திர உத்தியால் எடுத்தோதிய காலமாகிய முதற்பொருளும் பூவும் புள்ளும் முதலாகிய கருப்பொருளும் மயங்கியும் மயங்காமலும் வரும். மயங்கி வருதல் கவி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டு கொள்க. - 'ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன் பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் (அகநானூறு:48) என்ற வழி, இக்குறிஞ்சித்திணைப் பாட்டில் 'மருதத்திற்குக் கருப்பொருளாகிய செங்கழுநீர் மலரும், குறிஞ்சிக்குரிய வெட்சிப் பூவும் அணிந்தோள் என்றமையால் கருப்பொருள் மயக்கமாயிற்று என்பர். நிலம் நீர் தீ வளி ஆகாயம் என்னும் ஐம்பூதமும் தம்முள் கலந்ததால் (மயங்கியதால்) உலகில் எல்லாப் பொருள் களும் தோன்றின. அதுபோலவே உலகத்தில் ஓரிடத்தில் தோன்றிய பொருள்கள் மற்றோரிடத்திலே சென்று அங்குள்ளவர்க்குப் பயன்படுதலால் உலகியல் வளர்கின்றது. என்னும் கருத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.