பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

447 'வினையில் தோன்றும் பாலறி கிளவியும் பெயரில் தோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே' (கிளவியாக்கம் - 11) என்னும் நூற்பாவால், ஒருபாற் சொல் பிறிதொருபாற் சொல்லொடு மயங்காது; தம்பாற் சொல்லோடுதான் மயங்கிவரும் என்பர். பொருள் உலகத்தில் ஒர் ஆணும் பெண்ணும் மயங்கி நிற்பது (சேர்ந்து நிற்பது) சமூக ஆக்கத்திற்குப் பயன்படலாம். ஆனால் , சொல் உலகத்தில் ஒர் ஆண்பாற் பெயரும் பெண்பால் வினையும் மயங்கி நின்றால் அது பொருளுணர்ச்சிக்குக் கேடு பயப்பதாகும். ஆகையால் இவ்வகையான மயக்கம் கூடாது என்னும் கருத்தால் மயங்கல் கூடா என்று அவர் கூறுகின்றார். ஆனால், உயர்தினைச் சொல்லாகிய தன்மை இடத்துச் சொல்லும், அஃறிணைச் சொல்லும் யானும் என் எஃகமும் சாறும் என்று எண்ணுவழி விரவி (மயங்கி) வரலாம் என்பதை, 'தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென்று எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்' (கிளவியாக்கம் - 43) என்னும் நூற்பாவால் தொல்காப்பியனார் கூறுகிறார். பொருளதிகார மயக்கம் தொல்காப்பியனார் மரபியலில் நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் இந்த உலகம் என்று கூறுகிறார். ஐம்பூதங்களும் கலந்து இருதிணை ஐம்பாலாகக் காட்சியளிக்கும் இவ்வுலகத்தினைப் பொருளாதிகாரத்தே அகத்தினை புறத்திணை என்று இரண்டாக முதற்கண் பகுத்துக் கொண்டு அகத்திணையை ஏழாகவும் புறத் திணையை ஏழாகவும் பிரித்துக் கொள்ளுகிறார். அவ்வகத் தினையுள் கைக்கிளை, பெருந்திணை என்னும் இரண்டினை நீக்கிவிட்டுச் சிறந்ததாகிய ஐந்தினை குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்று பெயர் பெறும் என்று கூறுகிறார். இவ்வைந்திணையும் முதல் கரு உரி என்னும் முப்பொருளைப் பெற்று வரும் என்று கூறுகின்றார்