பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திணை மயக்கம் தோற்றுவாய் தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமை இன்ன இன்ன பொருளில் வரும் என்பதை உணர்த்துமிடத்து, அதனொடு மயங்கல் (தொல், 74) என்னும் பொருளிலும் அவ்வேற்றுமை வரும் என்பர். இதற்கு எடுத்துக்காட்டு "எள்ளொடு விராய அரிசி, என்பதாம். எனவே மயங்குதல் என்னும் பல பொருள் ஒருசொல்லானது இங்கே விரவுதல், கலத்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. எழுத்ததிகார மயக்கம் தொல்காப்பியனார் நூன்மரபில் மொழி இடையில் மெய்யெழுத்துக்கள் மயங்கும் முறையினைக் கூறியுள்ளார். இன்ன மெய்யெழுத்துக்கள் இன்ன மெய்யெழுத்துடன் மயங்கி நிற்கும் என்று விதி கூறியுள்ளார். இம்மயக்கம் தனிமொழியாக்கத்திற்குப் பயன்படுகிறது. உயிரீற்று மொழி புணர்வதை உயிர் மயங்கியல் என்றும், மெய்யீற்று மொழி புணர்வதைப் புள்ளி மயங்கியல் என்றும் ஆசிரியர் கூறுவதால், சொற்கள் புணர்தலும் மயக்கமாகின்றது. இது தொடர்மொழியாக்கத்திற்குப் பயன்படுகிறது. இன்னும், 'மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே’ (புணரியல்-9) என்னும் நூற்பாவால் மரூஉத்திரளாய் மயங்குகின்ற சொற் களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவும் மொழியாக் கத்திற்கு உரியதாகும். ஆகாத மயக்கம் 'அவன் வந்தாள், என்று ஆண்பாற் சொல்லையும் பெண்பாற் சொல்லையும் மயக்கிச் சொற்றொடர் அமைக்க லாமா எனின், அவ்வாறு அமைக்கக் கூடாதென்பதைக் கண்டிப்பாகத் தொல்காப்பியனார் கூறுகின்றார்'