பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 இழை நெகிழ எழுநிலை மாடத்தின்கண் இருந்து முடங்கிறைச் சொரிதரு மாத்திரளருவியில் இன்பல் இமிழிசையைக் கேட்டு நிற்கின்றனள். அவ்வாறு நிற்கின்றவள் தன் தலைவன் அக்காலத்தில் கூறிச் சென்ற சொற்களை நினைத்து பார்க்கின்றாள். உடனே அவளுக்குத் தலைமகன் உருமிடி வானம் முழக்குகின்ற கார்காலத்தில் திரும்பி வருவதாகக்கூறித் தான் வருந்துணையும் அவளை ஆற்றியிருக்குமாறு கூறிச் சென்ற சொற்கள் நினைவிற்கு வருகிறது. வரவே தலைமகன் கூறிச் சென்றிருப்பதால் அவன் சொற்களை மீறி இவ்வாறு வருந்துதல் தன் ஆருயிர்த் தலைவன் பெருமொழியைத் தவறியதாம் என்று கருதித் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு பிரிவுத் துயரை ஆற்ற நினைக்கின்றாள். இவ்வாறு தலைமகள் இன்துயில் வதியுநனைக் காணாது நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு எண்ணுகின்றமையை ஆசிரியர் நப்பூதனார் நீடுநினைந் தேற்றியும் என்ற பகுதிவழி உணர்த்துகின்றார்.