பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை திமிழில் தொன்னுரலாக விளங்குவது தொல் காப்பியமாகும். முன்தோன்றிய மூத்தமொழியில் கிடைக்க லாகும் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூலாகத் திகழ் கின்றது. தொல்காப்பியம் ஒர் இலக்கண நூல்: இவ்விலக்கண நூல் தோன்றுவதற்கு அடிப்படையாகச் சில இலக்கிய நூல்கள், தொல்காப்பியத்திற்கு முன்னர் இருந்திருக்கவேண்டும். ஏன் எனில் இலக்கியங்கண்டு இலக்கணம் இயம்புவது வழக்காறாகும். தொல்காப்பியம் ஒரு சிறந்த இலக்கணநூல் என்றும் இன்றைய மொழியலார் குறிப்பிடும் மொழியியல்நுட்பங்கள் பல தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன என்றும் அறிஞர் குறிப்பிடுவர். தொல்காப்பியத்தின் காலம் எவ்வகையில் பார்த்தாலும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு எனலாம். தொல்காப்பியம் குறித்துப் பல்வேறு சமயங்களில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இக் கட்டுரைகளை ஒரு சேரப் படிப்பவர்கள் தொல்காப்பியத்தின் மையக் கருத்தினை உணர்ந்து கொள்ளமுடியும் என்று நான் நம்புகின்றேன். ஏறத்தாழ நாற்பதாண்டுக் காலம் தமிழ்த் துறையில் பணியாற்றியதன் காரணமாக என் மனத்துள் எழுந்த தொல்காப்பியச் சிந்தனைகள் பல்வேறு கட்டுரைகளாக முகிழ்த்துள்ளனர். தமிழுலகம் இதனை வரவேற்கும் என்று கருதுகின்றேன்.