பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்' (தொல் - செய்யுளியல் - 78) மேற்குறிப்பிட்ட எழுநிலத்தெழுந்த செய்யுட்களை அடி வரையறையுள்ளது என்றும், அடிவரையறையில்லாதன என்றும் இரண்டாகப் பிரித்தோதி, அடிவரையறை யில்லாதன ஆறு என்றும், அவை நூலும் உரையும் பிரியும் முதுமொழியும் மந்திரமும் குறிப்பும் என்னும் பெயரின என்றும் தொல்காப்பியர் கூறுவர். மேற்கருத்தைக் கூறும் தொல்காப்பிய நூற்பாவைக் கீழே காண்க. 'எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை யில்லன ஆறென மொழிப' (157 செய்யுளியல்) 'அவை தாம் --- நூலி னான புணர்ந்த பிசியி னான ஏது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான (158 செய்யுளியல்) எழுவகைச் செய்யுளை வேறு வகையாகவும் பிரிக்கலாம். பாட்டு முதலான எழுவகைச் செய்யுளை அடிபற்றி, அடிவரையறை உடையன அடிவரையறையில்லாதன என்று தொல்காப்பியர் பிரித்து ஒதியுள்ளார். அந்த ஏழின் இயல்பைக் கருதினால் அவற்றைப் பா அல்லது பாட்டென்னும் செய்யுள், இலக்கணம் அல்லது நூல் செய்யுள், உரைச் செய்யுள், பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என நான்கு வகைப்படும். வாய்மொழிச் செய்யுள் நான்கு கூறாகப் பிரிக்கலாம். எழுவகைச் செய்யுளில் பாட்டு எழுவகைச் செய்யுளில் பாட்டு ஒன்றாகும். இப் பாட்டினை எழுவகைச் செய்யுளில் முதலாவதாகத் தொல்