பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காப்பியர் ஒதுவதைக் கொண்டே இதன் சிறப்பினை உணர்ந்து கொள்ளலாம். இப்பாட்டு அல்லது ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என நான்கு பிரிவாக நடைபெறும் என்பர் அவர். ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியென நாலியற் றென்ப பாவகை விரியே’ (101 செய்யுளியல்) பாவிற்கு உரிய பொருள் - அறம் பொருள் இன்பம் எழுவகைச் செய்யுளில் பா என்னும் பாட்டு ஆசிரியம் வஞ்சிவெண்பா கலியென நான்கு வகையாக வரும்பொழுது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற்பொருட்கும் அவை உரிமையாக வரும் என்பர். தொல்காப்பியர் இவ்விடத்தே நான்கு பாவிற்கும் அறம், பொருள், இன்பம் என்னும் மும்முதற் பொருள்களை உரிமை செய்துள்ளனர் என்பது உணரத்தக்கதாம். செய்யுள் வகையில் ஒன்றாகிய நூல், புலம் அல்லது புலன் என்கின்ற இலக்கண நெறியை இயம்புவதாகும். இது தொல்காப்பியர் காலத்தே எழுத்திலக்கணம் சொல் லிலக்கணம், பொருளிலக்கணம் என்று மூன்று பிரிவாகவும், பிற்காலத்தே அம்மூன்றும் யாப்பிலக்கணம் அணியிலக்கணம் என்னும் இரண்டும் கூட ஐந்து பகுப்பாகவும் வழங்குகின்றன. வாய்மொழி இலக்கியம் ஏட்டில் எழுதப் பெறாமல் மக்கள் வாய்மொழியாகவே வழங்கிக் கொண்டிருக்கும் இலக்கியங்கள் உள்ளன. அவற்றுள் முதலாவது உரையாகும். இவ்வுரையானது பாட்டின் குறிப்பை உணர்த்துவனவாகவும் உலகமக்கள் வெவ்வேறு வகையாக வழங்கும் கிளவி வடிவாகவும் வரும். பாட்டின் குறிப்பினை உணர்த்தும் பொழுது இப்பாட்டு இன்னபொழுதில் இன்னாரால் இன்னாரைக் கருதிப் பாடப்பட்டதென்றும், இதற்குத் திணை துறை இவை என்றும் கூறி வரும். இங்கே உரை பாட்டிற்குப் பயன்படு