பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 ன்ெறது. அவ்வாறின்றி உலக மக்கள் கற்பனையாகப் படைத்துக் கூறும் நகைச்சுவை முதலியனவற்றைத் தழுவிய கதை என்னும் கிளவி வடிவாகவும் அது வருகிறது. எனவே ரை பாட்டிற்குப் பயன்பட்டும் வாய்மொழி இலக்கியமாக வlதும் இரு நிலையை உடையதாக உள்ளது. 2. பிசி என்பது மக்களுக்குள் வாய்மொழியாகவே வழங்கி வரும் விடுகதையாகும். இதனை மக்கள் வெடி என்று வழங்குவர். விடுதல் என்னும் சொல் வெடி என மருவி வழங்குகின்றது. முது மொழியைத் தொல்காப்பியர் ஏது நுதலிய முதுமொழி என்று கூறுகின்றார். முதுமொழி என்றாலும் பழமொழி என்றாலும் ஒரு பொருளன. மக்கள் தங்களுக்குள் உரை பாடல் நிகழ்த்தும் பொழுது தம் கூற்றை வலியுறுத்துவதற்கே இதனைக் கூறுவார். இம்முதுமொழி ஏதுப்பொருளைக் கருதி எழுவதால் ஏது துதலிய முதுமொழி என்பர் 4 மந்திர மானது மறைமொழி வாய்மொழி என்னும் பெயரைப் பெற்று வழங்குகிறது. வாய்மொழி என்னும் பெயரினைக் கருதின் இது ஏட்டில் எழுதப்படாமல் வாய்மொழியாகவே வழங்கினவே என்பதும் மறைமொழி என்னும் பெயரினைக் கருதி பிறர்க்குப் புலப்படாமல் மறைவாக வழங்குவ தென்பது விளங்கும். 5. குறிப்பு ஒருவரைச் சபிக்கிற தீங்கு மொழியாகும். இதனை அங்கதம் என்பர். மேற்கூறிய எழுவகைச் செய்யுளில் முதல் இடத்தைப் பெற்று விளங்கும் பா என்னும் பாட்டே மிகச் சிறந்ததாகும். இது புலனெறி வழக்கு என்று கூறப்படும். இது புலனெறி வழக்கு என்று கூறப்படுவதற்குத் தகுதியாகச் செய்யுள் இலக்கண நெறியைக் கொண்டு இயங்குகிறது. செய்யுளில் பாட்டென்னும் வகை 'பாட்டரவம் பண்ணரவம் என்னும் (திணைமாலை | lறைம்பது) பாட்டில் பாட்டின் ஒசை வேறாகவும் பண்ணின் ஒசை வேறாகவும் கூறப்பட்டிருக்கிறது. இங்கே பாட்டென்றது ஆசிரியப்பா முதலான இயற்றமிழ்ப் பாடல்களையாகும். பண் என்றது பண்ணத்தி என்னும்