பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இசைத்தமிழ்ப் பாடல்களையாகும். இயற்றமிழ்ப் பாட்டு ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என்று நான்கு வகைப்படும். ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியென நாலியற் றென்ப பாவகை விரியே' (101 செய்யுளியல்) மேற்கூறிய நான்கு பாவேயன்றி வெண்பாவால் தொடங்கி ஆசிரியத்தால் முடியும் பாட்டும் உண்டு. இதனைப் பிற்காலத்தார் மருட்பா என்பர் (தொல், செய்.15) ஆசிரியப்பா அகவலோசை உடையது. மூன்றடிச் சிறுமையும் ஆயிரம் அடிப்பெருமையும் உடையது. இவ்வாசிரியப்பாவால் எட்டுத்தொகை நூலுள் ஆறுதொகை நூல்கள் இயன்றுள்ளன. பத்துப்பாட்டும் பெருங்கதையும் மணிமேகலையும் இன்னும் பல நூல்களும் ஆசிரியப்பா வினாலேயே இயன்றுள்ளன. வஞ்சிப்பா துரங்கலோசையால் வரும் இருசீரடியும் (குறளடியும்) முச்சீரடியும் (சிந்தடியும்) என்னும் இவ்வடி களால் இயன்று ஆசிரியச் சுரிதகம் பெற்று முடியும். பத்துப்பாட்டுள் பட்டினப்பாலை என்னும் பாட்டு ஆசிரிய அடி கலியடி முதலியவை கலந்து வந்து வஞ்சி நெடும்பாட்டாகும். வெண்பா அகவலோசையல்லாத ஒசையால் (செப்பல்) வரும். குறுவெண்பாட்டு நெடுவெண்பாட்டு பரிபாடல் கைக்கிளை அங்கதம் என ஐவகையாக வரும் குறுவெண் பாட்டு என்பது குறள் வெண்பா. நெடுவெண்பாட்டு என்பது (தொல்காப்பிய விதியின்படி) சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை வெண்பாக்களைக் குறிக்கும். பரிபாடல் என்பது பல உறுப்புக்களைப் பெற்று நடக்கும். இது இரண்டு பிரிவாக வரும். ஒன்று, நான்கு பாக்களின் பகுதியும் வந்து தொகுத்து நோக்கும் வழி ஆசிரியப்பா என்றோ, வஞ்சிப்பா என்றோ, வெண்பா என்றோ கலிப்பா என்றோ கூறப்பெறாமல் பொதுவாய் நிற்கும். மற்றொன்று எழுத்து கொச்சகம் அராகம் ஆறு