பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 றப்புக்களைப் பெற்று நடக்கும், கைக்கிளை என்பது ஒரு பற்காமம், அங்கதம் என்பது வசை. இப்பொருள் பற்றி வெண்பா வரும் கலிப்பா என்பது துள்ளலோசையைப் பெற்று வரும். துெ ஒத்தாழிசைக் கலிப்பா, கலிவெண்பாட்டு, கொச்சகம், றமுகலி என நான்கு வகைப்படும். இந்நான்கில் ஒத்தாழிசைக் கலியும் கொச்சகமும் பல உறுப்புக்களைப் பெற்று நடக்கும். கலிவெண்பாட்டு என்பது ஒரு பொருள் முதலியதாய் வெள்ளடியாய் இயன்று பாடுவோனது பொருள் முடி பே தன் அடி முடிவாக வரும் உறழ்கலி என்பது கூற்றும் மாற்றமுமாய் இயங்கிப் பாடுவோனது பொருள் முடி பே தனக்கு முடிவாகப் பெற்று வருவது. தொல்காப்பியர் செய்யுளியல் 75ஆம் நூற்பாவில் உரையை இரண்டாவதாக ஒதியிருப்பினும் 158ஆம் மாற்பாவில் நூலை இரண்டாவதாக வைத்தே இலக்கணங் கூறுகின்றார். இந்நூல் என்பது தொல்காப்பியர் கருத்தின்படி எழுநிலத்தெழுந்த செய்யுளில் ஒன்றாகும். இது புலன் என்கிற இலக்கணத்தைக் கூறுவதற்கு எழுந்தது. இது அறம் முதலான முப்பொருளைக் கூறுவதன்று, ஆனால், எழுத்திலக்கணத்தையும், சொல்லிலக்கணத்தையும், அறம் முதலான முப்பொருளின் இலக்கணமாக பொருளிலக் கணத்தையும் கூறுவதாகும். இந்நூல் முதலும் முடிவும் மாறுகோளின்றி, முன்னே தொகுத்தோதிப், பின்னர், தொகுத்ததனை வகைப்படுத்திக் கூறி, காண்டிகை அகலம் என்னும் உரைக் கூறுகளோடு பொருந்தி, உணர்த்தும் இலக்கணத்தை நுண்மையாக விளக்கிச் செல்லும் இயல்பை உடையதாக இருக்க வேண்டும் என்பர் (செய்யுளியல் 159), அந்நூல் நூற்பா, முதி. படலம், பிண்டம் என்று கூறப்படும் நான்கு வகையினைப் பெற்று நடக்கும் (செய். 161), அந்நான்கில் மாliபா என்பது, "கண்ணாடி தம்முன் எதிர்ப்பட்ட பொருளை உள்ள து உள்ளபடியே காட்டுவதுபோல" எடுத்துக்கொண்ட பொருள் முற்றிலும் தெளிவாக விளங்குமாறு யாத்தமைத்தல் என்பர் (செய்யு. 162) இங்கே கூறிய ஆடி நிழலின், என்ற