பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 என்று இரண்டு நூற்பாக்களைக் கூறியுள்ளனர். அதற்கு இளம்பூரணர் மேற்சொன்ன நான்கில் ஒவ்வொன்றும் இருவகையாக விரியும்; அவ்விரண்டில் ஒன்று செவிலி கூறுதற்கு உரியதாம்; மற்றொன்று எல்லோருக்கும் உரியதாம் என்பர். அவ்வாறின்றி அந்நான்கில் ஈற்றில் நின்ற பொருளொடு புணர்ந்த நகைமொழியானது செவிலிக்குரித் தென்றும் ஏனையோர்க்குரித்தென்றும் இருவகையாம் என்றும் உரை கூறுகின்றனர். பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் மேற்சொன்ன நான்கும் ஒன்றும் இரண்டும் ஒரு கூறாகவும், மூன்றும் நான்கும் ஒரு கூறாகவும் ஆகி இரண்டு வகையாம். அவ்விரண்டில் செவிலிக்கு மேல் நின்ற அதிகாரத்தால் மூன்றும் நான்கும் செவிலிக்கு உரித்தாகவும் ஒன்றும் இரண்டும் ஏனையோர்க்குரித்தென்றும் கூறுவர். լՊ&) பிசி என்றால் என்னவெனின், ஞாபகமும் பிசியும் அரும்பொருள் நடையே என்னும் திவாகர நூற்பாவின் படி, உணர்தற்கரிய பொருள் நடையை உடையது எதுவோ, அது பிசியாகும். பிசியோடு ஒத்த ஒன்றினை ஞாபகம் என்று திவாகரம் கூறுகின்றது. யாப்பருங்கல விருத்தியானது சூத்திரவகையில் ஞாபகச் சூத்திரம் என்றொரு வகையைக் குறிப்பிட்டு ஞாபகச் சூத்திரமாவது எளிதும் சிறிதுமாக இயற்றற்பாலதனை அரிதும் பெரிதுமாக இயற்றிப் பிறிதொரு பொருளை அறிவிப்பது என்று விளக்கங் கூறுகிறது. இவற்றையெல்லாம் வைத்து ஆராய்ந்து பார்த்தால், பொருளை எளிதாகப் புரிந்து கொள்ளாதபடி, அதனை மிகவும் கருதி உணருமாறு, அதற்குள்ள நடையில் (அரும் பொருள்நடை ஒதுவதே பிசி என்பதாகும். பிசியைப் பிதிர் என்றும் வழங்குவர். மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களும் மொழிவார் (கம்பராமா. சுந்தர - ஊர்தேடுபடலம் செய்.139) என்னும் கம்பன் பாட்டை நோக்குக. பிதிர் என்பதன் பொருளைப் பிங்கலம் துவலையும் நொடியும் கதையும் பிதிரே என்று கூறுகிறது. இக்காலத்தில்