பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பிதிர் என்பது புதிர் எனத் திரிந்து வழங்குகின்றது. தொல்காப்பியர் பிசியை நொடியொடு புணர்ந்த பிசியினான (செய் 158) என்பர். நொடி ஒருவகைச் சொல்நடை, நொடியையும் பிசியையும் வெவ்வேறாகவும் கூறுவர். பியிென் பயன் நாட்டுப்புற மக்கள் ஒன்றனை நுழைந்து கருதி ஆராய்ந்து உணருமாறு அவர்கள் அறிவதற்குப் பயிற்சி தருவது இப்பிசி என்னும் செய்யுளின் செயலாகும். இதனைக் கற்றோர். பிசி, ஞாபகம், அரும்பொருள் நடை, பிதிர், புதிர் என்று வழங்குகின்றனர். கல்லாதோர் வெடி என்று வழங்குகின்றனர். இது விடு (விடைகூறு) என்னும் சொல்லின் மரூஉவாகும். தொல்காப்பியர் கூறும் இலக்கணம் தொல்காப்பியர் அடிவரையறையில்லாமல், நொடி என்னும் நடையைப் பெற்று ஒப்பொடு கூடிய உவமை யாலும், தோன்றுவது கிளந்த துணிவினானும் இப்பிசி வரும் என்பர், ஒப்பொடு கூடிய உவமை 'கிண்ணம் போலே பூப்பூக்கும் கிடாரம் போலே காய் காய்க்கும் அது என்ன? என்பது இதனை விடுவிப்பவன் கருதியுணர்ந்து, பரங்கி அல்லது பூசணிக்கொடி என்று விடை கூறுவான். தோன்றுவது கிளந்த துணிவினானும் என்பது காயும் கோணற்காய் கொள்ளடா மைத்துனா கதையும் விடுவித்தேன் சொல்லடா மைத்துனா என்று வரும், இது கொள் என்னும் செடி காய்க்கும் ாயைப் பற்றிக் கூறுகிறான். கொள்ளடா மைத்துனா என்றதில் கொள் என்பது தோன்றுவது கிளந்த துணிவு. இப் பிசியைத் தொல்காப்பியர் சொல்லதிகாரத்தே மெய்ந்நிலை மயக்கு (எச்சவியல் - 53) என்ற கூறி, இது ஒரு திணைப்பெயர் மற்றொரு திணைக்காய் வரும் என்பர். இந்நூற்பாவுரையில் சேனாவரையர் ' மெய்ந்நிலை மயக்கின் _ஆககுரவும்' என்றது பொருண்மயக்காகிய பிசிச்செய்யுட்கண்