பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பாட்டின் வகை இரண்டு ஒருவாறு எழுநிலத்தெழுந்த செய்யுள் வகையைப் படித்தோம். இனி அச்செய்யுளில் முதலாவதாய் விளங்கும் பாட்டின் வகைகளை ஆராய்வோம். தொல்காப்பியர் பாட்டு, பாசிகள் பற்றியும், பொருள் பற்றியும் இரண்டு வகையாக வரும் என்பர். 'ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியென நாலியற் றென்ப பாவகை விரியே (செய். 107) என்னும் நூற்பாவின்படி, பாட்டானது ஆசிரியப்பா வஞ்சிப்பா வெண்பா கலிப்பா என நான்காகப் பிரிகின்றது. இன்னும் வெண்பாவில் தொடங்கி ஆசிரியத்தால் முடியும் மருட்பாவும் உண்டு. ஆசிரியத்தைப் பிற்காலத்தார் நேரிசை ஆசிரியப்பா இணைக்குறளாசிரியப்பா மண்டில ஆசிரியப்பா நிலை மண்டில ஆசிரியப்பா அடிமறி மண்டில ஆசிரியப்பா என நான்காகப் பிரிப்பர். இந்நாலும் இன்னியல் விரவியல் என இரண்டாகப் பிரியும் என்பர். வஞ்சிப்பா இருசீரடி வஞ்சிப்பா முச்சீரடி வஞ்சிப்பா என இரண்டு விரிவாகி ஒவ்வொன்றும் இன்னியல் விரவியல் என இரண்டாகப் பிரியும். வெண்பாவானது தொல்காப்பியர் காலத்தில் குறுவெண்பாட்டு நெடுவெண்பாட்டு கைக்கிளை அங்கதம் பரிபாடல் என ஐந்து பிரிவினவாகி இயங்கிற்று, பிற்காலத்தே குறள்வெண்பா சிந்தியல் வெண்பா இன்னிசை வெண்பா நேரிசை வெண்பா பஃறொடை வெண்பா என ஐவகையாகி அப்வொவ்வொன்றும் குறள் வெண்பா விகற்பக் குறள் வெண்பா வென்றும் நேரிசைச் சிந்தியல் வெண்பா விண்ணிசை சிந்தியல் வெண்பா ஒரு விகற்ப நேரிசைச் சlதியல் வெண்பா இருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா -II) விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா, இருவிகற்ப 胱” சிந்தியல் வெண்பா ஒரு விகற்ப நேரிசை வெண்பா. இரு விகற்ப நேரிசை வெண்பா, ஒரு விகற்ப