பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இன்னிசை வெண்பா பலவிகற்ப இன்னிசை வெண்பா என்றும் ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா என்றும் பிரிக்கப்பட்டு வழங்குகின்றன. தொல்காப்பியர் காலத்தில் கலிப்பாவானது ஒத்தாழிசைக் கலிப்பாகலிவெண்பாட்டு கொச்சகம் உறழ்கலி என நான்கு வகையாக வழங்கப்பட்டது. பிற்காலத்தார் உறழ்கலியை நீக்கிவிட்டுக் கலிப்பா மூன்று வகையாக வரும் என்பர். தொல்காப்பியர் ஒத்தாழிசைக்கலி இருவகையாகப் பிரியும் என்று கூறிவிட்டு, அவ்விருவகையில் முதல்வகை தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் நான்கினைப் பெற்று நடக்கும் என்பர். மற்றொரு வகை தேவரை முன்னிலைப்படுத்திப் பரவும் பொருளில் வரும் என்றும், அது வண்ணகம் ஒரு போகு என இருவகைப்படும் என்றும் அவ்வண்ணகம் தரவு தாழிசை எண்வாரம் என நான்கு வகை உறுப்பினைப் பெற்று நடக்கும் எனவும் ஒருபோகு என்பது தரவின் றாகித் தாழிசை பெற்றும்தாழிசையின்றித் தரவுடைத்தாகியும் எண் இடையிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையதாய் வரும் என்பர். அம்போதரங்கம் என்பது கொச்சகம் அராகம் சிற்றெண் அடக்கியலாகிய வாரம் என்னும் ஐந்து உறுப்பினைப் பெற்று முப்பதடிச் சிறுமையும் அறுபதடிச் சிறுமையும் பெற்று வரும். கலிப்பாவில் இரண்டாவதாகிய கலிவெண்பாட்டு ஒரு பொருளைக் கருதி வெள்ளடியால் திரிபின்றி வரும் என்றனர் தொல்காப்பியர் (147 செய்.) மூன்றாவதாக் கூறிய கொச்சகக் கலிப்பா என்பது தரவும் சுரிதகமும் இடைஇடை வரப்பெற்றும் ஐந்துசீர் அடி அடுக்கியும் ஆறுவகை உறுப்பினைப் பெற்றும் வெண்பா வாலேயே நடக்கும். உறழ்கலி என்பது ஒருவன் கூறும் கூற்றும் அதற்கு மற்றொருவன் கூறும் எதிர் மாற்றமும் இடைஇடையே கலந்து சுரிதகம் இல்லாமல் வரும் என்பர்.