பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 மருட்பா என்பது சமனிலை வியனிலை என இரண் _ாகிப் புறநிலை வாயுறை வாழ்த்து செவியறிவுறு கைக்கிளை என்னும் பொருள் பற்றி நடக்கும். பாக்களால் எழுந்த நூல்களில் ஆசிரியமாலை, பரிபாடல், கலித்தொகை முதலியன பாக்களால் எழுந்த இலக்கியமாம். தொல்காப்பியர் ஆசிரியம் முதலிய நான்கும் அறம் முதலான முப்பொருள் பற்றி வரும் என்று கூறுவதால் அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பாலென மூன்று பகுப்பினைப் பெற்று இலக்கியம் நடைபெறுவதாயிற்று. அவர் பொருளை அகம் புறம் என இரண்டாகப் பிரித்தலின் அகப்பொருள் பற்றியும் புறப்பொருள் பற்றியும் இலக்கியம் எழுவதாயிற்று. தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கிய வகைகள் தொல்காப்பியர் வாழ்த்தியல்வகை என்ற இலக்கியப் பகுப்பைக் குறிப்பிட்டு அது நான்கு பாவிற்கும் உரித்து என்பர் (105 ஆம் செய்) இளம்பூரணர் வகை என்றதனால் தேவரை வாழ்த்தலும் முனிவரை வாழ்த்துதலும் ஏனை யோரை வாழ்த்தலுமென அது மூவகைப்படும் என்பர். பேராசிரியர் வகை என்றதனால் தனக்குப் பயன்படுதலும் ப_ாக்கைப் பொருட்கும் பயன்படுதலுமென இருவகையான வாழ்த்தும் என்பதும் இனி முன்னிலையாக வாழ்த்துதலும் _ர்க்கையாக வாழ்த்துதலுமென இருவகைப்படும் என்பதும் கொள்க. அங்ங்னம் வாழ்த்தப்படும் பொருளாவன கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் _பன என்பர். அவற்றுள் கடவுளை வாழ்த்துவது _வுள் வாழ்த்துச் செய்யுள் எனப்படும். ஏனைய அறுவகை வாழ்த்தெனப் படும் என்பர். இவையன்றி புறநிலை வாழ்த்து வாயுறை வாழ்த்து அவையடக்கியல் செவியறிவுறு என்னும் நான்கு வகை விலக்கியத்தைக் குறிப்பிட்டு இவை கலிப்பாவிலும் வஞ்சிப்பாவிலும் வாரா என்பர். அவற்றுள் இரண்டு