பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வாழ்த்தாக வரும். வழிபடும் தெய்வம் நின்னை புறத்தே பாதுகாவலாய் நின்று காப்ப பழிப்பற்ற செல்வத்தோடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என்று பாடப்படுவது புறநிலை வாழ்த்தாகும். வாயுறை முன்னே கசந்து துவர்த்துப் பின்னே உறுதி பயக்கும் வேம்பும் கடுக்காயும் போன்றவெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்கும் என்று கருதிப் பாதுகாத்துக் கிளக்கும் கிளத்தலால் உண்மையாக அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்து எனப்படும். (உறை - நீள்நோய் போக்கும் மருந்து. இப்பாட்டு உலக மக்களைத் திருத்துவதற்கென்றே எழுந்ததாம். திருக்குள் வாயுறை வாழ்த்தாகும் (திருவள்ளுமாலை 25) அவையடக்கியல் தொல்காப்பியர் அவை என்பதைப்பற்றி பல இடங்களில் கூறியுள்ளார். சொல்லதிகாரத்தே அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் என்றொரு நூற்பா உண்டு. அவை என்பதற்கு இளம்பூரணர் நன்மக்கள் என்ற உரை கூறுவார். தெய்வச் சிலையார் அவைக்களம் என்பர். நன்மக்கள் நிறைந்த அவைக்களத்தே கூறத்தகாத சொல்லை மறைத்துக் கூறுக என்பர். புறத்திணையியலில் இவ்வவையை எட்டுவகை துதலிய அவையம் என்பர். இதன் உரையில் இளம்பூரணர் குடிப்பிறப்பு கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவு நிலைமை அழுக்காறாமை அவாவின்மை என்னும் எட்டுப் பாகுபாட்டைக் கருதிய அவை என்பர். இவ்வாறு சிறந்த அவையத்தாளாக்கருதிக் கூறும் சொல் அவையடக்கியல் என்பது. நச்சினார்க்கினியர் அவையடக்கியல் என்பது அவை அடக்கிய இயல் என விரியும். அஃது அவர் தன் பிழை பொறுத்து அடங்குமாற்றால் தன்னை இழித்துக் கூறி அவரைப் புகழ்வதாகும். அவைக்கண் தான் அடங்குதலாயின் அவையடங்கியல்' என்று பாடம் இருக்க வேண்டும் என்பர். அவையடக்கியலின் இலக்கணத்தை,