பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 'அவையடக் கியலே அரில்தமத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்று எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தற்றே! என்று தொல்காப்பியர் கூறுகின்றார். அவையடக்கிய லைக் குற்றமற ஆராயின், வல்லாதனவற்றைக் கூறினாலும் அவற்றை ஆராய்ந்து ஏற்றுக் கொள்க என்று எல்லா மாந்தர்க்கும் வழிபடுகிளவி கூறுவதாம். இது இலக்கியம் இலக்கண நூல் இவற்றின் முகப்பில் கூறப்படுகிறது. சொற்பொழிவானும் தொடக்கத்தில் அவையடக்கம் கூறுகின்றான். நாடகத்தொடக்கத்திலும் அந்நாடகத்தை நடத்துவோன் அவையடக்கம் கூறுவதுண்டு. செவி அறிவுறுஉ செவி அறிவுறுஉ என்பது ஒருவர்க்குக் கேள்வி அறிவு உண்டாகுமாறு கூறி வாழ்த்துதல். 'கற்றில னாயினும் கேட்க' வான்! 1I / திருக்குள். 'செவியுரை தானே பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே என்பது செவியறிவுறுஉவின் இலக்கணமாகத் தொல் காப்பியத்தே கூறப்பட்டுள்ளது. 'வாயுறை என்றாற்போல ஈண்டு செவியுறை என்றார். செவியுறை - செவி வழியாக _அருந்தும் மருந்து. பெரியார் நடுவன் பெருக்கமின்றி அடங்கி வாழ்தல் கடன் எனச் செவிக்கண் அறிவுறுத்துவது செவியுறையாகும். இங்கே பெரியார் என்றது அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய்' என்னும் இவராவார். இந்நூற்பா பொதுவாயிருப்பினும், 'மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி அறந்தெரி கோலார் கடியவுரைத்தன்று என்னும் செவியறிவுறுஉவை விளக்கும் புறப்பொருள் வெண்பா மாலைக் கொளுவை நோக்கினால் இது அரச மறுக்கு உரித்தாதல் புலப்படும். வாயுறைவாழ்த்தும் அரசற் குரியதென்பதைக் குஞ்சர வெல்படையான் கொள்ளானோ' என்னும் வெண்பாமாலை வாயுறை வாழ்த்தின் உதாரணச் செய்யுளை நோக்கி அறிக.