பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 செவியுறை என்பது பெரியோரிடத்தே அடங்கி ஒழுக வேண்டும் என்பதை உணர்த்தினாலும் ஓர் அரசன் தன்குடி மக்களிடத்தே நடந்து கொள்ள வேண்டிய முறையையும் கூறுகின்றது. செவியுறைப் பொருளை எல்லா இலக்கியங் களிலிருந்து ஓரிடத்தே தொகுத்துப் படித்தால் நாட்டை ஆள்வோர் நடந்து கொள்ள வேண்டிய முறையெல்லாம் அங்கிருப்பதை உணரலாம். செவி அறிவுறுஉ என்பது புறத்திணையில் பாடாண்தினைத்துறைகளுள் ஒன்றாக வருகின்றன. இத்துறைப்பாட்டு எட்டு உள்ள புறநானூற்றுள் அவை 2,3, 5, 6,35,40,55,184 என்னும் எண் உள்ளவையாகும். அரசநீதியை உணர்த்தும் செவியறிவுறுஉ புறநூனுற்றில் இரண்டாவது பாட்டு பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது. அவர் கூறுகிறார். சேரலாதனே! நீ அரசியல் அறிவில் மிகச் சிறந்தவனாக உள்ளாய் மண்திணிந்த நிலனைப் போல பகைவர் செய்யும் கொடுமைகளை அவரை வெல்லும் காலம் வரும்வரை பொறுத்துக் கொள்வாய் நிலன் ஏந்திய விசும்புபோல அவரை வெல்லும் சூழ்ச்சியதகலத்தினை உடையை விசும்பு தைவரு வளிபோல் பகைவரை வெல்லும் வலிமைகளை அடைவை: வளித்தலைஇய தீப்போலப் பகைவரை வெல்லுங்காலத்தில் வெல்ல வல்லாய்: தீ முரணிய நீர்போல் அவரை அளிக்க வேண்டிய காலத்தில் அளித்தலையும் செய்வாய். இத்தகைய ஆற்றல் வாய்ந்த பேரரசனாக நீ இருந்தாலும் உன்னுடலிலிருந்து அரசகாரியம் பார்க்கும் அமைச்சர் முதலிய அரசியல் சுற்றத்தினர் உலக இயல்பு மாறுபட்டாலும், அவர்கள் மாறுபடாமல் இருக்க வேண்டுமே அத்தகைய சுற்றத்தினருடன் கூடி நீ அச்சமின்றி வாழ்க என்றனர். இச்செவியுறை அரசன் பேராற்றல் வாய்ந்தவனாயினும், அரசியல் சுற்றத்தாராகிய அமைச்சர் முதலியோர் தம் ஒழுக்கத்தில் வேறுபடாமலிருக்க வேண்டும்; வேறுபடின்,