பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 என்னும் நூற்பாவில் பொருள்' என்றது உரிப்பொருளையே மிக்க பொருளினுள் பொருளவாகப் புணர்க்க நானுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே (பொருளியல் - 23) என்னும் நூற்பாவில் மிக்க பொருள் என்றது உரிப் பொருளாகும் இறைச்சி தானே பொருட்புறத் ததுவே (பொருளியல் - 33) என்னும் (நச்சினார்க்கினியர் பாடம்) நூற்பாவில் பொருள் என்றது உரிப்பொருளை இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியன் மருங்கின் தெரியு மோர்க்கே (பொருளியல்-34) இந்நூற்பாவிலும் பொருள் என்றது உரிப் பொருளையே. இக்காரணங்களால் பொருள் என்னும் உரிப் பொருளையே தலைமையாகக் கொண்டு வருவது தமிழர்தம் பொருளிலக்கணமாகும். இவ்வுரிப் பொருளைக் கூறுவதற்கு இடமாக வரும் நிலமும் காலமாகிய முதற்பொருள், கருப்பொருளெல்லாம் உரிப்பொருட்கு அடையாக வரும். முதற்பொருளை இடமாகப் பெற்று, கருப்பொருளை அடையாகப் பெற்று வரும் உரிப்பொருளுக்கு இலக்கணம் கூறுவதே பொருளிலக்கணமாகும். பொருளிலக்கணப்பாகுபாடு - பகுதி-2. சிவஞான முனிவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள், "ஈண்டுப் பொருளென்றது அகம் புறம்" என்னும் இருகூற்றுப் பதினாற்றினைப் பகுதியவாய்ச் செய்யுளிற் பாடுதற்குரிய இன்பம் முதலிய உலகியற் பொருளை மொழித்திறம் உணர்தற் பொருட்டுச் செய்யு ளாராய்ச்சிக்கு ஒருதலையான் வேண்டப்படுதல் பற்றி இயற்றமிழ் ஒழிபாகக் கொண்டு ஒதற்பாலன அவையே பாகலின், அற்றேல், இஃது (பொருள்) எழுத்தும் சொல்லும் போலச் செந்தமிழியற்கை சிவனுதற்கேதுவாகாமையானும்,