பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வடமொழியார் வேறோதுதல்லது சத்த நூலுள் (பொருளிலக்கணத்தை) ஒதாமையானும், ஈண்டு ஒதல் வேண்டாம் பிறவெனின், ஈண்டுக் கூறும் பொருட் பாகுபாடுகள் பொதுவாகாது, தமிழிற்கே சிறந்த வேறொன்றாற் பெறப்படாமையின், இப்பொருள் பற்றி வரும் பரிபாடல், கலி, அகநானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு, நற்றிணை, குறுந்தொகை, ஆற்றுப்படை, பதிற்றுப் பத்து முதலிய செய்யுள் ஆராயப்புகுந்தார்க்கு இப்பொருட் பாகுபாடு உணராக்காற் குன்று முட்டிய குரீப்போல இடர்ப்பட்டுச் செய்யுள் மொழித்திறம் g2– দলক IT மாட்டாமையின், செய்யுள் மொழித்திறம் உணர்ந்து செந்தமி ழியற்ற சிவனுதற்கு ஒருதலையான் ஒதல் வேண்டும் என்க" &Tost]/LI_J. GETT. இங்ங்னம் தமிழுக்கே உரியதாய்த் தமிழ்நடை, தமிழ் நெறி, என்றோதப்பட்ட பொருளிலக்கணத்தைத் தொல் காப்பியர் அகப்பொருள், புறப்பொருள் என இரண்டாகப் பகுத்துக் கொண்டு, அகப்பொருளைக் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என ஏழாகக் கூறி அவற்றின் பின் கூறும் புறப்பொருள் ஏழினை மேற்கூறிய அகத்திணை ஏழனுடன் இயைபுபடுத்திக் குறிஞ்சியின் புறம் வெட்சி, முல்லையின் புறம் வஞ்சி, மருதத்தின் புறம் உழிஞை, நெய்தலின் புறம் தும்பை, பாலையின் புறம் வாகை, பெருந் திணைப் புறம் காஞ்சி, கைக்கிளைப்புறம் பாடாண் எனக் கூறியுள்ளார். பெரிதும் தொல்காப்பியத்தைப் பின்பற்றிய நம்பி அகப்பொருள் விளக்க நூலாரும், மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை யெனஎழு பெற்றித் தாகும் எனத் தொல்காப்பியரைப் போலவே அகத்தினை ஏழ் என்று கூறி, இவ்வகத்தினை ஏழும், புனைந்துரை உலகியல் எனுந்திறம் இரண்டினும் தொல்லியல் வாழாமற் சொல்லப் படும் என்று கூறி,