பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அவற்றுள் கைக்கிளை யுடைய தொருதலைக் காமம் ஐந்தினை யுடைய தன்புடைக் காமம் பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் என்று அகத்திணை ஏழின் இயல்பினைக் கூறியுள்ளார். காமத்தை ஒருதலைக்காமமாகிய கைக்கிளை என்றும்; ஒத்த காமமாகிய ஐந்திணை என்றும், ஒவ்வாக் காமமாகிய பெருந்திணை என்றும் மூன்று வகைப்படுத்தி வழங்குதல், தமிழருக்கே உரியதாதலால் தமிழ்நடை என்று பொருளிலக் கணம் ஒதப்பட்டுள்ளது. வடநூலார் திருமணமுறையைப் பிரமம் முதலாக எட்டாகப் பகுத்துக் கொண்டு கூறுவர். அது வடமொழி நெறியாகும். அவர் எட்டாகக் கூறுவதும் காமம் பற்றிய தன்று. அவ்வெட்டும் நடக்கும் நடைமுறை பற்றியதாகும். முன்னே ஒரு தலைவனும் தலைவியும் களவாற் கூடிஒழுக, அதன்பின் கொடுத்தற்குரியார் கொடுப்பக் கரணத்தொரு நிகழ்வது தமிழ்நாட்டுத் திருமண முறையாகும். சில சமயத்தில் கொடுப்போரின்றியும் கரணம் நிகழ்வதுண்டு. தமிழ்நாட்டு மனமுறையில் பெரிதும் தலைவன் தலைவியர் தம் உள்ளப் புணர்ச்சியை அறிந்து கொண்டே திருமணம் நிகழ்த்துவர். சோழன் நலங்கிள்ளி என்பான், வருந்தப் பொரே னாயிற் பொருந்திய தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடை குழைகவென் றாரே (புறநானூறு - 73) என்று காதல் கொள்ளாப் பெண்டிரை மணப்பது அறமன்று என்று வஞ்சினம் கூறியவாற்றாலும் இதனை யறியலாம். ஒத்த காமமே சிறப்பாகக் கருதப்பட்ட தென்பதை, சங்க இலக்கியங்களில் இது சிறப்பாக மிகுதியாக ஒதப்பட் டுள்ளதையும் கைக்கிளை பெருந்திணை அவ்வாறு ஒதப் ப_ாமையயும் கருதி உணர்க.