பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பிற்காலத்தார் கூற்று இப்பொருள் நெறியைப் பிற்காலத்தார், அகத்தினை ஏழு என்று கூறி, அவ்வகத்திணையுடன் இயைபுபடுத்திப் புறத்திணை ஏழு என்று கூறிய தொல்காப்பிய முறையை விடுத்து, இயைபின்றி அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்று நான்காகப் பிரித்து வழங்குகின்றனர். ஆற்றும் அகமே புறமே அகப்புறம் அன்றிவென்றி போற்றும் புறப்புறம் என்றாப்பொருள் (வீரசோழியம் - 86) பொருளாவது அகப்பொருளும், அகப்புறப்பொருளும், புறப்பொருளும், புறப்புறப் பொருளும் என நான்கு வகைப்படும் என்றும், அவற்றுள் முல்லையும், குறிஞ்சியும், மருதமும், பாலையும், நெய்தலும் என்னும் ஐந்தும் அகப்பொருளாம் (வீரசோழியம் - 89) என்றும், 1 முது பாலையும், 2 பாசறைமுல்லையும், 3 வள்ளியும், 4 கர நடையும், 5 இல்லாள் முல்லையும், 6 காந்தளும், 7 குறுங் கலியும், 8 தாபதமும், 9 குற்றிசையும், 10 கைக்கிளையும், 1 தபுதாரமும் 12 பெருந்திணையும் என்றும், பன்னிரண்டும் அகப்புறப் பொருளாம் (வீரசோழியம் - 97) என்றும் வெட்சியும் கரந்தையும் வஞ்சியும் காஞ்சியும் உழிஞையும் நொச்சியும் தும்பையும் ஆகிய ஏழும் புறப்பொருள் (வீரசோழியம் - 98) என்றும், வாகையும் பொதுவியலும் பாடானும் ஆகிய இவை புறப்புறமாகுமென்றும் (வீரசோழியம் 98) புத்தமித்திரனார் என்னும் புலவர் கூறுகின்றார். யாப்பருங்கல விருத்தியுரையும் இனித் திணையாவன நான்கு வகைய; அகத்திணை, அகப்புறத்திண்ை, புறத்திணை, புறப்புறத்திணை என என்னை அகமே அகப்புறம் புறமே புறப்புறம் எனநான் கென்ப திணையின் படுந என்றாராகலின். அகத்திணை இருவகைய களவு கற்பென: இனி, அகப்புறமாவன காந்தள், வள்ளி சுரநடை, முதுபாலை, தாபதம், தபுதாரம் குற்றிசை, குறுங்கலி, பாசறை முல்லை,