பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கொண்டார். மீட்டலை வெட்சி கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை என்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்கும் புறனாகாமை உணர்க" என்றும் "ஒருவன் மண்ணாசையான் மேற்சென்றால் அவனும் அம்மண் னழியாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணாசையான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சி வேந்த ராவாரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என் பாரெனின் காஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமை யுனர்க" (புறத்திணை - 7) என்றும், "வேற்று வேந்தன் குலத்துக்கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற முழுஅரனைச் சென்ற வேந்தன் வளைத்தலும், இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலுமாகிய இரண்டு வழியாக இலக்கணத்தை உடைத்து உழிஞைத்திணை" (புறத்திணை - 10) "தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டும் என்றுணர்க" (புறந் . 35) என்றும் கூறுவர். நச்சினார்க்கினியார் புதுநூல் என்பது பன்னிருப டலத்தையும் புறப்பொருள் வெண்பாமாலையையும் கருதியே கூறுகிறார். மதிலை முற்றுபவன் உழிஞை அணிதலேயன்றி அதனைக் காப்பவனும் உழிஞை அணியும் வழக்கத்தை, கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொடரு குடுமி களைந்தநுதல் வேம்பின் ஒண்டவிர் நெடுங்கொடி உழிஞைப் பலரொடு மலைந்து குறுந்தொடி கழித்கைச் சாபம் பற்றி நெடுந்தேர் கொடிஞ்சி பொலிய நின்றோன் (புறநா. 77)