பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 என்ற புறநானூற்றுள் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போர் நிகழ்ச்சியால் அறியலாம். மேற்காட்டிய அவர் உரைப்பகுதியில் பன்னிருபடல நெறியை மறுப்பதோடன்றி அதனைப் புதுநூல் என்று குறிப்பிட்டு அந்நூல் வழிப் புறநானூற்றுக்குத் துறை கொள்ளுதல் நன்றன்று என்பதையும் குறிப்பிடுகிறார். டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் புறநானூற்றுத் தினை துறை விளக்கங்களின் முன்னுரையில் (முதற்பதிப்பு) "புறநானூற்றில் ஒவ்வொரு செய்யுட்களின் ஒழுக்கத்தைப் புலப்படுத்தி அவ்வச் செய்யுட்களின் பின் எழுதப்பட்டுள்ள தினையும் துறையும் தொல்காப்பியப் புறத்திணையியலிற் கூறிய இலக்கணத்தோடு சிறுபான்மை ஒத்திருப்பினும் பெரும்பாலும் ஒவ்வாமையானும் இவை புறப்பொருட் பன்னிரு படலத்தின் வழியே அமைக்கப்பட்டுள்ளனவெனத் தோற்றினும், இப்பொழுது அந்நூல் அகப்படாமையின் அதிலிருந்தெடுத்து யீதொன்றும் எழுதக்கூடாமையாலும், அந்நூலின் வழித்தாகிய புறப்பொருள் வெண்பா மாலையின் கருத்திற்கு இவை பெரும்பாலும் ஒத்திருக்கின்றமையாலும் இத்திணை விளக்கமும் பின்னுள்ள துறைவிளக்கமும் புறப்பொருள் வெண்பாமாலையின் படியே எழுதப் பட்டன" என்பர். தொல்காப்பியர் பாடாண்திணையிற் கூறியவற்றில், கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் என்னும் துறையையும் வாகைத்திணையில் வாகைவென்றி முதலிய பல வென்றிகளையும் ஐயனாரிதனார் தாம் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலையில் ஒழிபு என்னும் பகுதியில் கூறுகின்றார். இது தொல்காப்பியர் கூறிய விதியைத் தம் கருத்திற்கேற்ப மாற்றிக் கொண்டமைக்குச் சான்றாகும். பேராசிரியர் உவமையியல் ஈற்றில் "இனி ஆனந்த உவமை எனச் சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவற்றை அவ்வாறு கோடுமெனின்? அவைகள் தாம் அகத்துள்ளும் பிற சான்றோர் செய்யு ளுள்ளும் வருதலிற் குற்றமாகா. அகத்தியனாராற் செய்யப்