பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 பட்ட மூன்று தமிழிலும் அடங்காமை வேறு ஆனந்தவோத் தென்பது ஒன்று செய்தாராயின், அகத்தியமும் தொல் காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யுட் குற்றம் வேறுபடாவென்பது" என்று கூறுவர். இவர் இவ்வாறு கூறுவதைக் கருதினால் அகத்தியர் அகத்தியத்திற்கு வேறாக ஆனந்தவோத்தினைச் செய்தார் என்பதை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை அறிகிறோம். ஆனால், யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும் ஆளவந்த பிள்ளையாசிரியரும் அகத்தியனார் ஆனந்த ஒத்து என்னும் நூலைச் செய்ததாகக் கூறி அதிலிருந்து பல நூற்பாக்களை எடுத்துக் காட்டுகின்றார் (யாப்பருங்கல விருத்தியுரை, பக். 557), மேலும், சிதம்பரப் பாட்டியல் என்னும் நூல், "அகத்தியன் சொல் எழுத்து முதற் குற்றச் செய்யுட்கு அடையாமல் தொடை கொண்டால் அடையும் செல்வம்" என்று அகத்தியனார் ஆனந்த ஒத்தைக் குறிப்பிடுகின்றது. அகத்தியர் மேற்கூறிய பலருடைய கருத்துக்களைக் கருதி ஆராய்ந்தால் நமக்குச் சில உண்மைகள் புலனாகும். இருக்கும் இலக்கண நூல்களில் அகத்தியத்தையும், தொல்காப்பியத்தை யும் பழமையானதாக இறையனார் களவியல் உரை கூறுகிறது. மேலும் அவ்வுரை அகத்தியரை முதற்சங்க, இடைச்சங்க காலத்தில் இருந்த புலவராகவும் கூறுகின்றது. மேலும் இராமாயண காலத்தில் அகத்தியர் இருந்ததாக வான்மீகியார் குறிப்பிடுகின்றார். அகத்தியரைப் பற்றித் தமிழ் நாட்டுத் தல புராணங்கள் பலவகையான கதைகளைச் சொல்லுகின்றன. இக்காரணத்தால் அகத்தியர் ஒருவர் அல்லர் என்பது தெளிவாகப் புலனாகின்றது. முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்ற திருவாசகம் இறைவனைக் குறித்தல் போல், அகத்தியர் என்ற பெயர் முற்காலத்துப் புலவர் வரிசையிலும்,