பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பிற்காலத்தே மருத்துவநூல் எழுதிய தேரையர், புலிப்பாணி, போகர் என்னும் புலவர் வரிசையிலும் கேட்கப்படுகிறது. அகத்தியம் அகத்தியம் என்ற நூலிலிருந்து இளம்பூரணர், யாப்பருங்கல விருத்தியாசிரியர், மயிலைநாதர் முதலியோர் யாப்பிலக்கணம் பற்றியும் சொல்லிலக்கணம் பற்றியும் சில நூற்பாக்களை உதாரணம் காட்டுகிறார். ஆனால் அந்த நூற்பாக்கள் தொல்காப்பிய நூற்பாப் போலப் பழமையாகக் கருதும் நடையில் இல்லை. அந்நூற்பாக்களில் பொத்தகம் (புஸ்தகம்) பல்லவம் (பல்லவர் நாடு) முதலான பெயர்களை மலையாள இலக்கண நூலாகிய லீலா திலகத்தில், எகர ஒகர ஆய்த ழகர றகர னகரம் தமிழ் பொது மற்றே என்றொரு நூற்பா அகத்திய நூற்பா என்று காட்டப் பட்டுள்ளது. இது, றனழஎ ஒவ்வும் உயிர்மெய்யும் உயிரளபு அல்லாச் சார்புந்த தமிழ்பிற பொதுவே என்னும் நன்னூல் நூற்பாவைப் பெரும்பாலும் அடியொற்றி எழுதப்பட்டுள்ளது. இஃது எல்லாம் பிற்கால வழக்கம். இவற்றை எல்லாம் கருதின் அகத்தியம் என்று இப்பொழுதுள்ள நூல் தொல்காப்பியக் காலத்திற்கும் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூலாகும். தொல்காப்பியர் இருவர் இளம்பூரணர் தொல்காப்பியக் கருத்துடன் மாறு படுவதால் பன்னிரு படலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் செய்திலர் என்று கூறுகின்றார். ஆனால், பன்னிருபடலமும், வெண்பாமாலையும் பன்னிருபடலத்துள் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றியுள்ளார் என்றே கூறுகிறது. இத்தகைய இடரான இடத்தில் ஆராய் வார் தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் வேறு, பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் பாடிய தொல் காப்பியர் வேறு என்று கருதி உணரவேண்டும். நச்சினார்க்